வட மாநிலங்களில் காங்.,குக்கு பின்னடைவு?| Backlash for Congress in northern states?

தமிழக முதல்வர் ஸ்டாலினின் மகனும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி, சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசுகையில், சனாதன தர்மத்தை கடுமையாக விமர்சித்தார். அவரது பேச்சுக்கு, வட மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த விவகாரம், வட மாநில அரசியலில் அனலை கிளப்பி உள்ளது. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், கிரிராஜ் சிங், அனுராக் தாக்குர், ராஜீவ் சந்திரசேகர், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர், தி.மு.க.,வின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். ‘சனாதன தர்மத்தை விட்டால் நம் நாட்டுக்கு வேறு கதி இல்லை’ என்றும் அவர்கள்தெரிவித்துள்ளனர்.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.

ஹிந்துத்வாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து, இந்த மாநிலங்களில் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இந்த நேரத்தில், காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க., அமைச்சரின் இத்தகைய பேச்சு, அந்த மாநிலங்களில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன.

இது, வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் காங்.,குக்கு எதிராக திரும்பிவிடக் கூடும் என, அக்கட்சித் தலைவர்கள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.

இதை உறுதி செய்யும் விதமாக,மஹாராஷ்டிராவின் காங்., தலைவர் நானா படோல், ”உதயநிதிக்கும், எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இது, அவரது தனிப்பட்ட கருத்து,” என, கூறியுள்ளார்.

”இது பற்றி நாங்கள் எந்த கருத்தும் கூற முடியாது,” எனக் கூறி, காங்., பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் நழுவிக்கொண்டார்.

— புதுடில்லி நிருபர் –

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.