லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், அனுராக் கஷ்யப், கவுதம் மேனன், மிஷ்கின், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கும் லியோ படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது.
தனி ஒருவன் 2 வில்லன் இவரா?
படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் லியோ படத்தில் நடிக்குமாறு லோகேஷ் கனகராஜ் கேட்டும் தன்னால் நடிக்க முடியாமல் போனதாக விஷால் தெரிவித்துள்ளார்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
லியோ பற்றி விஷால் கூறியதாவது,
லியோ படத்தில் விஜய்யின் தம்பியாக நடிக்குமாறு கேட்டார்கள். ஆனால் நான்கு மாதங்கள் டேட்ஸ் கேட்டார்கள். அந்த நேரத்தில் என்னால் அவ்வளவு டேட்ஸ் ஒதுக்கிக் கொடுக்க முடியவில்லை. அதனால் தான் லியோ படத்தில் நடிக்க மறுத்தேன் என்றார்.
விஷால் நடிக்க மறுத்ததை அடுத்து லியோ படக் கதையில் மாற்றம் செய்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். தம்பி கதாபாத்திரத்தை அண்ணனாக மாற்றி அதில் ஆக்ஷன் கிங் அர்ஜுனை நடிக்க வைத்திருக்கிறார் லோகேஷ்.
அர்ஜுனின் பிறந்தநாளான ஆகஸ்ட் 15ம் தேதி அன்று அவரின் கதாபாத்திரமான ஹரால்டு தாஸ் குறித்த வீடியோ வெளியானது. அதை பார்த்த விஜய் ரசிகர்களுக்கு லைட்டாக பயம் வந்துவிட்டது. மாஸ்டரில் விஜய் சேதுபதி கெத்து காட்டியது போன்றே ஹரால்டு தாஸும் மாஸாக இருக்கிறாரே. அய்யோ, இந்த லோகி படங்களில் எல்லாம் வில்லன்கள் ஏன் இந்த அளவுக்கு கெத்து காட்டுகிறார்கள் என்றார்கள்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்
சஞ்சய் தத்தோ ஆண்டனி தாஸாக வருகிறார். அவர் வில்லாதி வில்லன். அதனால் அவர் ஒரு பக்கம் விஜய்யை என்ன பாடு படுத்தப் போகிறாரோ என்பதே ரசிகர்களின் பெரும் கவலையாக இருக்கிறது.
லியோ படத்தின் கதை லோகேஷ் கனகராஜின் எல்.சி.யூ. தான் என கூறப்படுகிறது. உலக நாயகன் கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் வந்த அமர் கதாபாத்திரம் லியோவில் இருக்கிறதாம். அதனால் இன்னொரு வில்லாதி வில்லனான ஃபஹத் ஃபாசிலையும் லியோவில் பார்க்கலாம்.
யார் வந்தாலும் சரி அந்த விஜய் சேதுபதி மட்டும் லியோவில் வரவேக் கூடாது கடவுளே என்கிறார்கள் விஜய் ரசிகர்கள். அவர்கள் அந்த அளவுக்கு மிரள முக்கிய காரணம் இருக்கிறது.
பிரபாஸ், ஷாருக்கானை பின்னுக்குத்தள்ளிய ரஜினி: இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் தலைவர்
முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் ஹீரோவை ஓவர்டேக் செய்துவிட்டார் விஜய் சேதுபதி. சொல்லப் போனால் மாஸ்டருக்கு பிறகே வில்லன் விஜய் சேதுபதியை ரசிகர்கள் கொண்டாடத் துவங்கினார்கள்.
வில்லனை பார்த்து திட்டாமல் ரசிகர்கள் கொண்டாடத் துவங்கிவிட்டார்கள். மாஸ்டர் விஜய் சேதுபதியின் படம் என்றார்கள். அதனால் தான் லியோ பட அறிவிப்பு வந்தபோது வில்லனாக விஜய் சேதுபதி மட்டும் இருக்கவே கூடாது என்று ரசிகர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.
இறைவன் ட்ரெய்லர் பயமா இருக்கு, 1,2,3னு மண்டக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு: ஜெயம் ரவிக்கு ஒரு ஹிட் பார்சல்
விஜய்யை டார்ச்சர் செய்தது போதாது என்று ஜவான் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானை கொடுமைப்படுத்த சென்றுவிட்டார் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.