ஸ்மார்ட்போன் சந்தையை கலக்க வருகிறது நோக்கியாவின் அசத்தலான 5ஜி போன்

நோக்கியா இந்தியாவில் மீண்டும் களமிறங்கியுள்ளது. ஒருபுறம், இந்திய சந்தையில் மிட்-ரேஞ்ச் மற்றும் உயர்நிலை (ஹை எண்ட்) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகி வருகின்றன. ஆனால், நோக்கிய அனைத்து பயனர்களையும் கவரும் வண்ணம் பட்ஜெட் மற்றும் ஃபீச்சர் போன்களை வழங்கி வருகிறது. மிட்-ரேஞ்சிலும் நோக்கியா போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இப்போது ஒரு புதிய டீஸர் வந்துள்ளது. அதில் செப்டம்பர் 6 ஆம் தேதி நோக்கியா 5G தொலைபேசியை அறிமுகப்படுத்தப் போகிறது என்று கூறப்பட்டுள்ளது. டீசரில் போனின் ஒரு சிறிய முன்னோட்டமும் காணப்பட்டது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

இது எந்த 5G தொலைபேசியாக இருக்கும்?

இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் இது ஒரு வீடியோவுடன் டீஸ் செய்யப்பட்டுள்ளது: ‘வேகத்தை அனுபவிக்க நீங்கள் தயாரா?’ என்ற கேள்வியுடன் வீடியோ ஸ்மார்ட்போனின் வட்டமான மூலைகளை குறிப்பிட்டு காட்டியுள்ளது. போனின் விவரங்கள் தெரியாமல் இதை பற்றி ஊகிக்க கடினமாக உள்ளது. ஏனெனில், வரவிருக்கும் நோக்கியா 5G ஸ்மார்ட்போன் குறித்து கசிவுகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாகவுள்ள போன் பற்றி இன்னும் எந்த விவரமும் இல்லை. இருப்பினும், கடந்த ஆண்டு Nokia X30 அறிமுகத்துடன் வெளியீட்டு தேதி ஒத்துப்போவதால், இது ஒரு புதிய X தொடர் ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்ற எண்ணம் பரவலாக உள்ளது.

பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்ஃபோனை நிறுவனம் அறிமுகம் செய்கிறது 

நோக்கியா (Nokia) இப்போது புதிய ஃபீச்சர் போன்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்களை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில், நிறுவனம் நோக்கியா C12 மற்றும் 2660 ஃபிளிப்புக்கான சில சிறப்பு வண்ண வகைகளையும் அறிமுகப்படுத்தியது.

நோக்கியா X30 5G: விவரக்குறிப்புகள்

HMD-க்கு சொந்தமான நிறுவனம் இதற்கு முன்னர் 5G ஸ்மார்ட்போனான Nokia X30 5G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஃபோனில் 6.43-இன்ச் AMOLED டிஸ்ப்ளே உள்ளது. இது 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் அதிகபட்சம் 700 nits பிரகாசம் கொண்டது. இதன் HD + டிஸ்ப்ளே 1080 x 2400 பிக்சல் ரெசல்யூஷனை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 695 SoC ஆல் இயக்கப்படுகிறது, இதில் Adreno 619 GPU உள்ளது. இது மூன்று சேமிப்பு வகைகளில் கிடைக்கிறது – 128 ஜிபி + 6 ஜிபி ரேம், 128 ஜிபி + 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி + 8 ஜிபி ரேம்.

கேமரா பிரிவில், இது 50MP முதன்மை சென்சார் மற்றும் 13MP அல்ட்ராவைட் லென்ஸுடன் பொருத்தப்பட்ட இரட்டை பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காலிங் என்று வரும்போது, ​​முன்புறத்தில் 16எம்பி கேமரா உள்ளது.

கூடுதல் தகவல்

சில நாட்களுக்கு முன்னர், நோக்கியா நிறுவனம், C12 Pro இன் இந்த புதிய வண்ண மாறுபாட்டை சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இந்த போனின் விலை 7 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வலுவான பேட்டரி மற்றும் அட்டகாசமான கேமரா கிடைக்கின்றன. இது தவிர, இந்த போனின் வடிவமைப்பும் மிக சிறப்பாக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.