எதிர்பார்ப்பில் ரசிகர்கள்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதுவரை லியோ படத்தில் இருந்து ஒரு சில கிலிம்ஸ் வீடியோ வெளியான நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெற இருக்கின்றது
வித்யாசம்லியோ திரைப்படம் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜின் ஸ்டைலிலேயே உருவாக இருக்கிறதாக தகவல் வந்துள்ளது. எனவே இப்படம் விக்ரம் படத்தை போல செம மாஸான ஒரு படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் இப்படத்தில் நாம் வித்யாசமான விஜய்யை பார்க்கலாம் என்றும் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். விஜய் இப்படத்தில் சாதுவான ஒரு கதாபாத்திரத்திலும், டானாக ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்க இருப்பதாக வந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. அந்த வகையில் இப்படம் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
போட்டிலியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பின் காரணமாக இப்படத்துடன் வேறெந்த படமும் போட்டி போடாது என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மற்ற மொழிகளில் லியோ படத்துடன் பல படங்கள் வெளியாகவுள்ளன. கன்னடத்தில் ஷிவ்ராஜ்குமாரின் கோஸ்ட் திரைப்படமும், தெலுங்கில் பாலையா மற்றும் ரவி தேஜா படமும் வெளியாகவுள்ளது. எனவே லியோ படத்திற்கு கடுமையான போட்டி நிலவும் என்றே தெரிகின்றது. மேலும் லியோ திரைப்படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஆயிரம் கோடி வசூல் சாத்தியமா ? என்றே சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றது. இருப்பினும் இப்படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூலை எட்டி சாதனை படைக்கும் என்பதே பலரது எண்ணமாக உள்ளது
விஜய்யின் என்ட்ரிநாளுக்கு நாள் லியோ படத்தை பற்றி ஏதேனும் ஒரு தகவல் வெளியாகி வருகின்றன. ஆனால் அதெல்லாம் உண்மையா ? இல்லை வதந்தியா ? என்பது பற்றி தெரியவில்லை என்றாலும் அத்தகவல் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் அதுபோல ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. என்னவென்றால் லியோ படத்தில் விஜய்யின் என்ட்ரி படம் துவங்கிய 20 ஆவது நிமிடத்தில் தான் வருமாம். மேலும் அந்த என்ட்ரி வித்தியாசமாகவும் ,அதே சமயத்தில் செம மாஸாகவும் இருக்கும் என்றும் தகவல் வருகின்றன. ஆனால் இத்தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது படம் வெளியான பின்னரே தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது