விஜய் லியோ படத்தை முடித்துவிட்டு தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கின்றார். தற்போது இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்காக லால் ஏஞ்சல்ஸ் சென்றுள்ளார் விஜய். இதையடுத்து இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். புதிய கீதை படத்திற்கு பிறகு 20 வருடங்கள் கழித்து விஜய்யின் படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். இந்நிலையில் தளபதி 68 படத்தின் முதல் பாடல் செம தர லோக்கலாக இருக்கும் என யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார்
விஜய் லியோ படத்தை முடித்துவிட்டு தளபதி 68 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளை துவங்கியுள்ளார். ஏற்கனவே வெளியான தகவலின் படி விஜய் தளபதி 68 படத்தில் இரு வேடங்களில் நடிப்பதாக தகவல்கள் வந்தன. அப்பா மற்றும் மகனாக விஜய் தளபதி 68 படத்தில் நடிப்பதாகவும் அதில் ஒரு கதாபாத்திரத்தின் லுக் டெஸ்ட்டிற்காக தான் லால் அஞ்செல்ஸ் நகரில் நடைபெற்று வருகின்றது.
Thalapathy 68: தளபதி 68 படத்தில் ஜோதிகா நடிக்க மறுத்தது ஏன் ? வெளியான உண்மை காரணம்..!
அதற்காக விஜய் மற்றும் வெங்கட் பிரபு குழுவினர் லாஸ் அஞ்செல்ஸ் நகருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் புதிய கீதை படத்திற்கு பிறகு 20 ஆண்டுகள் கழித்து விஜய்யின் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கின்றார். பலரும் எதிர்பார்த்த இக்கூட்டணி தளபதி 68 படத்தின் மூலம் இணைந்துள்ளது.
பின்னணி இசையின் கிங் என போற்றப்படும் யுவன் ஷங்கர் ராஜா விஜய்க்காக செம மாஸான இசையை தருவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா சமீபத்தில் ஒரு கல்லூரி விழாவில் தளபதி 68 படத்தை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, தளபதி 68 படத்தின் முதல் பாடல் தர லோக்கலாக இருக்கும் என கூறியுள்ளார். இதையடுத்து விஜய் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் மங்காத்தா, மாநாடு என தன் இசையின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்த யுவன் ஷங்கர் ராஜா தளபதி 68 படத்திலும் தன் மேஜிக்கை நிகழ்த்துவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது .