அடங்குற ஆளா ஜெயிலர்!, 4வது ஞாயிற்றுக்கிழமையில் கூட மாஸ் வசூல்: எத்தனை கோடினு தெரியுமா?

Jailer Blockbuster: ரஜினியின் ஜெயிலர் படம் ரிலீஸாகி 4 வாரங்கள் ஆகிவிட்டாலும் வசூல் நல்லபடியாக வந்து கொண்டே இருக்கிறது.

​ஜெயிலர்​நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸான ஜெயிலர் படம் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி வரை தான் ஜெயிலர் வசூல் நடக்கும் என்றார்கள். ஆனால் நான்காவது வாரத்திலும் ஜெயிலர் படம் தினமும் கோடிகளில் தான் வசூல் செய்து கொண்டிருக்கிறது.பவன் கல்யாண்​ஆந்திராவை அதிர வைக்கும் பவன் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டம்​​வசூல்​டைகர் முத்துவேல் பாண்டியன் அதிரடி காட்டிய ஜெயிலர் படம் நேற்று மட்டும் இந்தியாவில் ரூ. 3 கோடி வசூலித்திருக்கிறது. படம் ரிலீஸான நான்காவது ஞாயிற்றுக்கிழமையில் இத்தனை கோடி வசூல் வந்தது பெரிய விஷயம் தான். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படம் செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அது வரை ஜெயிலரின் வசூல் வேட்டை தொடரும் என்று கூறப்படுகிறது.

​ஓடிடி ரிலீஸ்​ஷாருக்கானின் ஜவானுடன் மோதும் ரஜினியின் ஜெயிலர்: இதை சத்தியமா எதிர்பார்க்கலஜெயிலர் படம் பாக்ஸ் ஆபீஸை அதிர வைத்திருக்கும் நிலையில் அடுத்ததாக ஓடிடியில் ரிலீஸாகவிருக்கிறது. ஜவான் படம் ரிலீஸாகும் செப்டம்பர் 7ம் தேதி தான் ஜெயிலர் படம் அமேசான் பிரைமில் வரவிருக்கிறது. ஏற்கனவே தியேட்டரில் ஜெயிலரை பார்த்து ரசித்தாலும் செப்டம்பர் 7ம் தேதி அன்றே ஓடிடியிலும் பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

​ரஜினியின் சம்பளம்​ஜெயிலர் படத்தில் நடிக்க ரஜினிகாந்துக்கு ரூ. 110 கோடி சம்பளம் பேசப்பட்டது. படம் சூப்பர் டூப்பர் ஹிட்டான நிலையில் லாபத்தில் இருந்து ஒரு பங்கை ரஜினிக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த பங்கு மட்டும் ரூ. 100 கோடி என்று கூறப்படுகிறது. ஜெயிலர் படத்திற்கு ரூ. 210 கோடி வாங்கியதன் மூலம் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகியிருக்கிறார் ரஜினிகாந்த்.

​பிரபாஸ், ஷாருக்கானை பின்னுக்குத்தள்ளிய ரஜினி: இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் தலைவர்


​கார் பரிசு​ஜெயிலர் படம் உலக அளவில் ரூ. 600 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இதையடுத்து ரஜினியின் போயஸ் கார்டன் பங்களா முன்பு விலை உயர்ந்த கார்களை கொண்டு வந்து நிறுத்தி அதில் ஒன்றை தேர்வு செய்யுமாறு சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதிமாறன் தெரிவித்தார். ரஜினியோ பி.எம்.டபுள்யூ. எக்ஸ் 7 காரை தேர்வு செய்தார். அதன் விலை ரூ. 1.51 கோடி மட்டுமே.
​தலைவர் 170​ஜெயிலர் கொடுத்த தெம்பில் அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் ரஜினிகாந்த். அந்த படத்தில் புது லுக்கில் வருகிறாராம். ஞானவேல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க ரஜினியின் அன்புக்குரிய அனிருத் இசையமைக்கிறார். அந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஃபஹத் ஃபாசில் நடிக்கிறார்.
​ஷிவாண்ணா​ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் கெத்து காட்டியிருந்தார். இதையடுத்து அவரை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெயிலரை அடுத்து தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருக்கிறார் சிவராஜ்குமார். அந்த படத்தில் தனுஷின் அண்ணனாக வருகிறார். ஜெயிலரை விட பெரிய கதாபாத்திரம் என்று தெரிவித்துள்ளார் ஷிவாண்ணா.

​நயன்தாரா பற்றி இந்த 2 லேட்டஸ்ட் விஷயம் தெரியுமா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.