அட்லீயின் முதல் படமாக ‘ஜவான்’ உருவாகியுள்ளது. அவரது இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள இந்தப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. பான் இந்திய அளவில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் இந்நிகழ்ச்சி டிவியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டுள்ளதில் தற்போது சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது.
விஜய்க்கும், அவரது ரசிகர்களுக்கும் பேவரைட்டான இயக்குனர் என அட்லீயை சொல்லலாம். ராஜா ராணி படம் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்த அட்லீ, தனது இரண்டாவது படத்திலே விஜய்யுடன் இணைந்தார். இவர்களது கூட்டணியில் முதல் படமாக ‘தெறி’ படம் வெளியானது. இவர்கள் காம்போவில் வெளியான முதல் படமே அதிரிபுதிரியான ஹிட்டடித்தது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதனை தொடர்ந்து தான் அடுத்ததடுத்து விஜய்யை வைத்து மெர்சல், பிகில் படங்களை இயக்கி ஹாட்ரிக் ஹிட் கொடுத்தார் அட்லீ. இதனாலே தளபதி ரசிகர்களின் பேவரைட் இயக்குனராக அட்லீ மாறினார். அது மட்டும் இல்லாமல் எல்லா இடத்திலும் விஜய்யை தன்னுடைய அண்ணன் என தான் குறிப்பிட்டு பேசுவார் அட்லீ.
இந்நிலையில் தான் அண்மையில் நடைபெற்ற ‘ஜவான்’ இசை வெளியீட்டு விழாவில், இந்தப்படம் உருவாக காரணமே என்னுடைய அண்ணன் தளபதி விஜய் தான். என்னுடைய கம்போஃர்ட் ஜோனில் இருந்து வெளிய கொண்டு வந்ததே விஜயண்ணா தான் என தளபதி குறித்து ரொம்ப பெருமையாக பேசி இருந்தார் அட்லீ. அவருடைய பேச்சை சோஷியல் மீடியா முழுக்க வைரலாக்கி டிரெண்ட் செய்தனர் தளபதி ரசிகர்கள்.
Jawan: ‘ஜவான்’ படத்தில் விஜய்.? சைலண்டாக அட்லீ செய்த சம்பவம்: லீக்கான தகவல்.!
இந்நிலையில் தான் நேற்றைய தினம் ‘ஜவான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சன் டிவியில் ஒளிப்பரப்பானது. இந்நிகழ்ச்சியில் விஜய் பற்றி அட்லீ பேசிய பேச்சுக்கள் அனைத்தும் எடிட் செய்து நீக்கப்பட்டு சன் டிவியில் ஒளிப்பரப்பாகியுள்ளது. இதனால் தளபதி ரசிகர்கள் கடுமையாக அப்செட் ஆனார்கள். மேலும், இந்த விவகாரம் சோஷியல் மீடியா முழுக்க பரபரப்பை கிளப்பியது.
இந்த சர்ச்சை பெரிதாக வெடித்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், ‘ஜவான் இசை வெளியீட்டு விழாவை கொண்டாடினீர்களா.?, இந்நிகழ்ச்சியின் தயாரிப்பு, எடிட்டிங் கோகுலம் மூவிஸ்’ என குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் ‘ஜவான்’ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பற்றி அட்லீ பேசியதை நீக்கியதற்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கும் எந் சம்பந்தமும் இல்லை என்பதை போல் குறிப்பிட்டுள்ளது.
ஆனாலும் சன் பிக்சர்ஸின் இந்த விளக்கத்தை விஜய் ரசிகர்கள் ஏற்று கொள்ளவில்லை. இதனிடையில் ‘ஜவான்’ படம் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெயிலர் மட்டும் இல்லை.. ‘ஜவான்’ உருவாகவும் விஜய் தான் காரணமாம்: தளபதிக்கு எவ்வளவு பெரிய மனசுப்பா.!