உலக சந்தையில் எரிவாயுவின் விலை கடந்த மாதத்தை விட இம் மாதம் 100 டொலர்களால் அதிகரித்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இன்று (04) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டு அறிவித்தார்.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால்;; அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 3,127 ரூபாவாகும்.
இதேவேளை, 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 58.00 ரூபாவினால்; அதிகரிக்கப்பட்டு;ள்ளதுடன், அதன் புதிய விலை 1,256.00 ரூபாவாகும்.
அத்துடன் 2.3 கிலோ கிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 26.00 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 587.00 ரூபாவாகும்.
ஐந்து மாதங்களின் பின்னர் எரிவாயு விலை ஐந்து தடவைகள் குறைக்கப்பட்ட நிலையில், முதல் தடவையாக இந்த எரிவாயு விலை 145.00 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.