சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க ஒரு குடும்பத்தினர் புகார் ஒன்றைக் கொடுத்தனர். அந்தப் புகாரில் `தங்களுடைய மகள் பிளஸ் ஒன் படித்து வருகிறார். அவர் எப்போதும் செல்போனும் கையுமாகவே சுற்றிக் கொண்டிருந்தார். மேலும் வீட்டில் வைத்திருந்த 12 சவரன் தங்க நகைகளும் காணாமல் போயிருந்தன.
அதனால் எங்களின் மகளிடம் நகைகள் குறித்து விசாரித்தபோதுதான் அவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஜினியர் வேல்முருகன் என்பவரிடம் கொடுத்ததாக சொல்கிறார். எனவே வேல்முருகனிடம் விசாரித்த தங்க நகைகளை மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தனர். இந்தப் புகாரையடுத்து கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீஸார் வேல்முருகனைத் தொடர்பு கொண்டு பேசினர்.
அப்போது அந்த மாணவியும் தானும் இன்ஸ்டா மூலம் பழகி வருவதாக வேல்ராஜ் தெரிவித்தார். நகைகள் குறித்து கேட்டபோது அவரிடமிருந்து தங்க நகைகளை வாங்க வில்லை என்று கூறினார். அதனால் மாணவியிடம் போலீஸார் தனியாக விசாரித்தனர். அப்போது மாணவி, கூரியர் மூலம்தான் தங்க நகைகளை அனுப்பி வைத்தேன் என்று தெரிவித்தார். இதையடுத்து கூரியர் நிறுவனத்தை தொடர்பு கொண்டு போலீஸார் விசாரித்தபோது மாணவி, வேல்முருகனுக்கு கூரியர் அனுப்பியது உண்மையென தெரிந்தது.
இதையடுத்து வேல்முருகனிடம் ஆதாரங்கள் அடிப்படையில் போலீஸார் விசாரித்தனர். இந்தச் சூழலில் மாணவி பயன்படுத்திய செல்போனையும் வேல்முருகனின் செல்போனையும் சைபர் க்ரைம் போலீஸாரின் உதவியோடு கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் மாணவி தன்னுடைய ஆபாச வீடியோஸ்கள் போட்டோஸ்களை வேல்முருகனுக்கு அனுப்பியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனால் போலீஸார் வேல்முருகனிடம் விசாரித்தனர். ஆதாரங்களை அவரிடம் காண்பித்தபோது வேல்முருகனின் முகம் மாறத் தொடங்கியது. விசாரணைக்குப்பிறகு வேல்முருகனை போலீஸார் கைதுசெய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் போலீஸார், “சென்னையைச் சேர்ந்த அந்த மாணவிக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் வேல்முருகனுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் ஆன்லைன் கேம்மை விளையாடி வந்திருக்கிறார்கள். அந்த விளையாட்டுக்கு பணம் தேவைப்பட்டதால் மாணவியிடமிருந்து அதை வேல்முருகன் பெற்றிருக்கிறார்.
வீட்டுக்குத் தெரியாமல் மாணவியும் பணத்தை அனுப்பி வந்திருக்கிறார். பணம் இல்லாததால் வீட்டிலிருந்த தங்க நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக திருடிய மாணவி, அதை கூரியர் மூலம் வேல்முருகனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த வகையில்தான் 12 சவரன் தங்க நகைகளை வேல்முருகன் மாணவியிடமிருந்து வாங்கியதாகத் தெரிகிறது. அதையும் விற்று வேல்முருகன் ஆன்லைன் கேமில் விளையாடி வந்திருக்கிறார். நகைகள் மாயமான பிறகுதான் மாணவி மீது அவரின் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் மாணவிக்கு கவுன்சலிங் அளித்திருக்கிறோம். வேல்முருகன், இன்ஜினியர் படித்திருக்கிறார். அவரின் பின்னணி குறித்தும் விசாரித்து வருகிறோம்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY