வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சண்டிகர்: ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால், நிறைய பணம் மிச்சமாகும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல், குறித்து பஞ்சாப்பில் செய்தியாளர்கள் சந்திப்பில் அனுராக் தாக்கூர் கூறியதாவது: தேர்தல்கள் நடக்கும் போது ஆண்டுதோறும் அதிக நேரம் செலவிடப்படுகிறது. அந்த நேரத்தை தேசத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினால், நாட்டிற்கு பலன் கிடைக்கும்.
அரசும், வேட்பாளர்களும் தேர்தல் நடத்துவதற்கு ஆயிரக்கணக்கான கோடிகளை செலவிடுகின்றனர். ஒரே நேரத்தில் நடந்தால், நிறைய பணம் சேமிக்கப்படும். மொத்தத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேசத்தின் நலனுக்கு ஆனது. எதிர்கட்சிகள் இது குறித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
உற்சாக நடனம்
முன்னதாக பஞ்சாப் மாநிலம் பாக்ராவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்ற, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, வரவேற்பு அளித்த கலைஞர்களுடன் அனுராக் தாக்கூர் சேர்ந்து நடனம் ஆடி மகிழ்ந்தார். இது தொடர்பாக வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement