
சூர்யாவின் வாடிவாசல் பணிகளை தொடங்கிய வெற்றிமாறன்
சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அதேபோல் விடுதலை படத்தை அடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இவர்கள் இருவரும் இணையும் வாடிவாசல் படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் இருவரும் அடுத்தடுத்து பிஸியாக இருப்பதால் இதன் படப்பிடிப்பு தொடங்காமல் உள்ளது. இந்நிலையில் வாடிவாசல் படத்தின் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் பணிகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதற்காக அடிக்கடி லண்டன் சென்று விட்டு வருகிறார் வெற்றிமாறன். விடுதலை-2 படத்தை அடுத்து வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கங்குவா படத்தை அடுத்து சுதா இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் தான் அடுத்து சூர்யா நடிக்கப் போகிறார் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.