தனி ஒருவன் படத்தில் பிரபாஸ் ஹீரோவா?
கடந்த 2015ம் ஆண்டில் மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து வெளிவந்த திரைப்படம் 'தனி ஒருவன்'. இந்த படம் ஜெயம் ரவி, மோகன் ராஜா இருவருக்கும் திருப்புமுனையாக அமைந்தது. இதனால் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுவதாக அறிவித்தனர்.
சமீபத்தில் மோகன் ராஜா அளித்த பேட்டியில் தனி ஒருவன் பற்றிய சுவாரஸ்ய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதன்படி, “தனி ஒருவன் படத்தின் கதை முதலில் பிரபாஸை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது. அந்த சமயத்தில் அவர் லவ் படத்தில் நடிப்பதில் ஆர்வமாக இருந்தார். அதனால் அவர் நடிக்கவில்லை” என்றார்.
அதன்பிறகு தான் ஜெயம் ரவி இப்படத்தில் நடித்துள்ளார். மேலும், தனி ஒருவன் தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண் 'துருவா' எனும் பெயரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.