மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் என ஒன்பது மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளைய தினம் (செப்டம்பர் 5) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மேற்குறிப்பிட்ட இடங்களில் மட்டுமல்லாமல் இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 6ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழ்நாட்டில் வேறு சில பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது
செப்டம்பர் 7ஆம் தேதி வியாழக்கிழமை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி என ஆறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. அன்றைய தினம் மேலும் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 8ஆம் தேதி வெள்ளிக் கிழமை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
செப்டம்பர் 8 முதல் 10ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்றும் நாளையும் (செப்டம்பர் 3, 4) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.