தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோவிலில் 12நாள் ஆவணி திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று அதிகாலை நடைபெற்றது. அரோகரா கோஷத்துடன் கோவில் கொடி மரத்தில் கொடியேறியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருத்தலம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். திருச்செந்தூரில் ஆவணி திருவிழா ஆண்டுதோறும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். 12 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினந்தோறும் காலை, மாலை […]