அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தனது முதல் பாலிவுட் படத்திலே ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றி, அதனை சிறப்பாக செய்தும் முடித்துள்ளார் அட்லீ. ஒருப்பக்கம் இந்தப்படத்திற்கான புரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், படத்திற்கான டிக்கெட் முன்பதிவு பணிகள் முழு வேகத்தில் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
ஷாருக்கான் நடிப்பில் தனது முதல் இந்தி படத்தை இயக்கியுள்ளார் அட்லீ. நீண்ட காத்திருப்புக்கு பிறகு இந்தப்படத்தை உருவாக்கியுள்ளார். பிர்மம்ண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கு பாலிவுட்டில் மட்டுமல்லாமல் கோலிவுட்டிலும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நம்மூர் இயக்குனர் இந்தி சினிமாவுக்கு போய் செய்துள்ள சம்பவத்தை பார்க்க ஆர்வமாக உள்ளோம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. தனது இரண்டாவது படத்திலே விஜய்யை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றிய இவர் தொடர்ச்சியாக தெரறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார்.
இதனாலே விஜய் ரசிகர்களுக்கு பிடித்தமான இயக்குனராக மாறினார் அட்லீ. இந்நிலையில் ‘ஜவான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நடைபெற்றது. பொதுவாக தான் நடிக்கும் படங்களின் புரமோஷன்களில் கலந்துக்கொள்ளாத நயன்தாரா, ‘ஜவான்’ இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பார் என கூறப்பட்டது. ஆனால் நயன்தாரா இந்த இசை வெளீயீட்டு விழாவில் பங்கேற்கவில்லை.
Jawan: ‘ஜவான்’ படத்தில் விஜய்.? சைலண்டாக அட்லீ செய்த சம்பவம்: லீக்கான தகவல்.!
இந்நிலையில் தான் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கு ஒன்றை துவங்கினார் நயன்தாரா. தனது இரட்டை குழந்தைகளுடன் ஆரவாரமாக என்ட்ரி கொடுத்தார். இன்ஸ்டாகிராமில் நுழைந்த வேகத்தில் 24 மணிநேரத்திற்குள் நயன்தாராவுக்கு 1 மில்லியன் ஃபாலோயர்கள் பெற்றும் சாதனை படைத்தார். ட்விட்டரில் கணக்கு வைத்துள்ள நயன்தாரா, திடீரென இன்ஸ்டாகிராம் உலகத்திற்குள் நுழைந்தது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி ‘ஜவான்’ படத்தினை புரமோஷன் செய்யும் விதமாகவே அவர் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத நயன்தாராவிடம், இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கி அதில் ‘ஜவான்’ படம் தொடர்பான பதிவுகளை பகிரும் படி படக்குழுவினர் கேட்டுள்ளனராம்.
View this post on InstagramA post shared by N A Y A N T H A R A (@nayanthara)
இதனையடுத்து நயன்தாரா இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சமூக வலைத்தளங்களில் படத்தை ப்ரோமோட் செய்யும் ட்ரிக்ஸ் குறித்து ரசிகர்களும் தற்போது ஆர்வமாக பேசி வருகிறது. மேலும் இன்னும் இரண்டு நாட்களில் பாலிவுட் சென்று ஜவானில் அட்லீ செய்துள்ள வித்தையை பார்த்து விடலாம் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் கூறி வருகின்றனர்.
Jawan: ‘ஜவான்’ படத்தில் தளபதி விஜய்.?: டிரெய்லரில் இதையெல்லாம் கவனிச்சீங்களா..!