நயன்தாரா இன்ஸ்டாவில் சேர்ந்ததும் இந்த சினிமா பிரபலத்தை தான் முதலில் ஃபாலோ செய்தார்

இன்ஸ்டாகிராமுக்கு வந்திருக்கும் நயன்தாரா இதுவரை 20 பேரை பின்தொடர்கிறார்.

​நயன்தாரா​கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையான நயன்தாரா சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். தன் பிரைவசியை விரும்பும் அவர் ஆகஸ்ட் 31ம் தேதி இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார். மகன்கள் உயிர், உலகுடன் தான் இருக்கும் வீடியோவை வெளியிட்டு வந்துட்டேனு சொல்லு என ரஜினி வசனத்துடன் என்ட்ரி கொடுத்தார். அவர் இன்ஸ்டாவில் சேர்ந்த உடன் சிலரை பின்தொடரத் துவங்கினார்.பவன் கல்யாண்​ஆந்திராவை அதிர வைக்கும் பவன் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டம்​​அனிருத்​நயன்தாரா இன்ஸ்டாகிராமுக்கு வந்த உடன் தன் காதல் கணவரான விக்னேஷ் சிவன், தி ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தை பின்தொடர்ந்தார். அவர் பின்தொடர்ந்த முதல் சினிமா பிரபலம் இசையமைப்பாளர் அனிருத் தான். அதன் பிறகு முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷலை பின்தொடர்ந்தார். பின்னர் அமெரிக்க பாடகியும், நடிகையுமான பியான்ஸேவை ஃபாலோ செய்யத் துவங்கினார் நயன்தாரா.

​ஷாருக்கான்​கத்ரீனா கைஃபை முந்திய நயன்தாரா: இன்ஸ்டாகிராமில் புது சாதனைநயன்தாரா தற்போது ஷாருக்கான், ஆலியா பட், தீபிகா படுகோன், ஜெனிஃபர் லோபஸ், டாக்டர் ரெனிடா ராஜன், நடிகை பார்வதி, அனுஷ்கா சர்மா, ப்ரியங்கா சோப்ரா, ஜெனிஃபர் ஆனிஸ்டன், கத்ரீனா கைஃப் உள்ளிட்ட 20 பேரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார். அந்த பட்டியலில் ரஜினி, விஜய் பெயர் இல்லாததை பார்த்த தமிழ் ரசிகர்களோ, என்னம்மா இப்படி பண்றீங்களேமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

​1 மில்லியன்​நயன்தாரா பற்றி இந்த 2 லேட்டஸ்ட் விஷயம் தெரியுமா?இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கிய வேகத்தில் 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற இந்திய நடிகையாக இருந்து வந்தார் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப். அவரின் சாதனையை முறியடித்துவிட்டார் நயன்தாரா. இன்ஸ்டாவுக்கு வந்த 24 மணிநேரத்திற்குள் நயன்தாராவுக்கு 1 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்துவிட்டார்கள். கத்ரீனாவுக்கு 24 மணிநேரத்திற்கு பின்னர் தான் 1 மில்லியன் கிடைத்தது.

​ஜவான்​நயன்தாராவுக்கு இதுவரை 2.5 மில்லியன் ஃபாலோயர்கள் கிடைத்திருக்கிறார்கள். அவர் இன்ஸ்டாவுக்கு வந்து தன் மகன்களின் வீடியோ மற்றும் ஜவான் பட ட்ரெய்லரை வெளியிட்டார். அதன் பிறகு அவர் எந்த போஸ்ட்டும் போடவில்லை. அட்லி இயக்கத்தில் தான் ஷாருக்கானுடன் சேர்ந்து நடித்திருக்கும் ஜவான் படத்தை விளம்பரம் செய்யவே நயன்தாரா இன்ஸ்டாவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

​பாலிவுட்​செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸாகவிருக்கும் ஜவான் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் நயன்தாரா. அந்த படம் மூலம் அட்லி, நயன்தாராவுடன் சேர்ந்து அனிருத்தும் பாலிவுட்டுக்கு சென்றிருக்கிறார். ஜவான் படத்தில் ஷாருக்கானை மொட்டைத் தலையுடன் காட்டியிருக்கிறார் அட்லி. இதுவரை ஷாருக்கானை அப்படி பார்த்திராத பாலிவுட் ரசிகர்கள் மிரண்டுவிட்டார்கள். இந்த தமிழ் இயக்குநர் ஏதோ வித்தியாசமாக இருக்கிறாரே என்கிறார்கள்.

​டி50 இயக்குநர் தனுஷுக்கு நோ சொன்ன பிரபலம், ஓகே சொன்ன நடிப்பு ராட்சசி

​அட்லி​ட்ரெய்லர் வெளியிடுவதில் வல்லவர் அட்லி. அது தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் பாலிவுட் ரசிகர்களுக்கு தெரியாது. இந்நிலையில் வெளியான ஜவான் ட்ரெய்லரை பார்த்த இந்தி ரசிகர்கள் மெர்சலாகிவிட்டார்கள். அட்லி தான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் ட்ரெய்லரில் காட்டி பாலிவுட்காரர்களை வாய் பிளக்க வைத்துவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.