இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான குவாடரில் சீ கிங் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் மீண்டும் தரைக்கு திரும்பும் போது தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் மூன்று பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. அதில் 2 பேர் அதிகாரிகள் எனவும் ஒருவர் பணியாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) தலைவருமான ஷெபாஸ் ஷெரீப், வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.