சென்னை: மழைநீர் தேங்குவதால் பாதிப்புள்ளாக்கி வரும், சென்னை கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் எதிரில், ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை 45 நாட்களில் முடிக்குமாறு தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார். தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளுதல், சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், நீர்வள ஆதாரம், நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம், வருவாய்த் துறை செயலர்கள், மாநகராட்சி […]