வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஷ் சால்வே,68, திரினா என்ற பெண்ணை மூன்றாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. லண்டனில் நடந்த இத்திருமண நிகழ்ச்சியில் முன்னணி தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
மூத்த வழக்கறிஞரான ஹரீஷ் சால்வே,68,கடந்த 1999 ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தார். பல்வேறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் ஆஜராகியுள்ளார். தற்போது பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வாடும் குல்பூஷன் ஜாதவ் வழக்கில் ஆஜராகியுள்ளார்.
ஏற்கனவே இரு முறை திருமணம் செய்து விவகாரத்தான நிலையில் , தற்போது திரினா என்ற பெண்ணை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். லண்டனில் எளிமையாக நடந்த இந்நிகழ்ச்சியில், ஹரீஷ் சால்வேயின் நெருங்கிய நண்பகள் மற்றும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி, சுனில்மிட்டல், லலித்மோடி, ஹிந்துஜா குரூப் சகேதாரர்கள் என தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். இதன் புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement