பார்வதிபுரம், ஆந்திராவில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு காரணமாக, காயமடைந்தவர்களுக்கு, ‘மொபைல்போன் டார்ச்’ வெளிச்சத்தில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தது, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில், ஒய்.எஸ்.ஆர்.காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மன்யம் மாவட்டத்தில் மின்வெட்டு ஏற்படுவது மிகவும் சாதாரணமாகிவிட்டது.
இதனால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், இரு தினங்களுக்கு முன், குருபம் பகுதியில், ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த எட்டு பேர் காயமடைந்தனர். இதில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர்கள் அருகில் உள்ள சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். டாக்டர்கள் சிகிச்சை அளித்து கொண்டிருந்தபோது திடீரென மின்தடை ஏற்பட்டது.
இதையடுத்து, மொபைல்போன் டார்ச் பயன்படுத்தி, அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இது தொடர்பான படங்கள், சமூக வலைதளங்களில் வெளியானதால், புதிய அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement