மக்களவைக்கு 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அரசு அமைந்தது. அதனைத் தொடர்ந்து வந்த 2019 தேர்தலிலும் வென்று பிரதமராக நரேந்திர மோடியே தொடர்கிறார். கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக நரேந்திர மோடி பிரதமர் பொறுப்பை வகித்து வருகிறார். டெல்லியில் இருந்து அலுவல்களை கவனிக்கும் மோடி, அவ்வப்போது வெளிமாநில சுற்றுப் பயணங்கள் செல்கிறார். மேலும் வருடத்தில் பலமுறை வெளிநாடுகளுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக பிரபுல் சர்தா என்பவர் இரண்டு கேள்விகளை எழுப்பி இருந்தார். முதல் கேள்வியாக பிரதமர் மோடி பொறுப்பேற்றதில் இருந்து எத்தனை நாட்கள் பணியில் இருந்துள்ளார் என்று கேட்டிருந்தார். அதற்கு, “பிரதமர் நரேந்திர மோடி அனைத்து நேரங்களிலும் பணியில் இருக்கிறார். அத்துடன், மோடி பதவி ஏற்றதில் இருந்து எந்த விடுமுறையும் பெறவில்லை” என்று தெரிவித்தார்.
இரண்டாவது கேள்வியாக பிரதமராக மோடி பொறுப்பு ஏற்றது முதல் எத்தனை நாட்கள் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்துகொண்டுள்ளார் என்று கேட்டுள்ளார். அதற்கு, கிட்டத்தட்ட 3,000 நிகழ்வுகளுக்கு மேல் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார். இது சராசரியாக ஒரு நாளுக்கு ஒரு நிகழ்வாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆர்டிஐ கேள்விகளுக்கு பிரதமர் அலுவலக துணைச் செயலாளர் பர்வேஷ் குமார் பதில் அளித்துள்ளார்.
பிரதமர் மோடியின் உழைப்பு குறித்து பல்வேறு பாஜக தலைவர்களும் பெருமிதத்துடன் பேசி வருகிறார்கள். மணிப்பூர் விவகாரம் தொடர்பான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பேசும்போது அமித்ஷா, பிரதமர் மோடி ஒருநாள் கூட விடுமுறை எடுத்துக்கொள்ளாமல் 24 மணி நேரத்தில் 17 மணி நேரம் வரை உழைக்கிறார். சுதந்திரமடைந்த பிறகு இந்த அளவு உழைக்கும் ஒரே பிரதமர் மோடிதான் என்று உணர்ச்சி பொங்க பேசினார்.
திருப்பதியை நோக்கி நகரும் ஐடி நிறுவனங்கள் – இளைஞர்களுக்கு அடிக்கும் செம ஜாக்பாட்
கடந்த ஆண்டு பாஜக மகராஷ்டிரா மாநிலத்தின் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், பிரதமர் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குகிறார் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.