வாழ்த்துங்களேன்…

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்… இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்!

வாழ்த்துங்களேன்

அன்பார்ந்த வாசகர்களே!

உங்கள் சக்தி விகடன் 20-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதி புதிய வடிவம் பெறுகிறது.

பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை, பெயர்-நட்சத்திர விவரங்களை இனி உங்களின் மொபைல் போன் மூலமே பதிவு செய்யலாம். அவ்வகையில், இந்தப் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்திசெய்தால் போதும். அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரப்படி, இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான பிரார்த்தனைகள், அவர்களின் வாழ்வில் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், தமிழகத்தின் வழிபாட்டுச் சிறப்புமிக்க ஆலயங்களில் சமர்ப்பிக்கப்படும்.

19.9.23 முதல் 2.10.23 வரை பிரார்த்தனைக்குப் பதிவு செய்ய வேண்டிய கடைசித் தேதி: 15.9.23

காஞ்சிபுரம், வெள்ளைகேட்

ராஜகுபேரர் ஆலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை!

19.9.23 முதல் 2.10.23 வரையிலும் சுப நிகழ்வுகள், இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனை, காஞ்சிபுரம், வெள்ளைகேட் அருகே உள்ள ராஜகுபேரர் ஆலயத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. வைத்தியநாத ஸ்வாமி உடனமர் ராஜ குபேரர் ஆலயம் தன விருத்தித் தலமாகவும் கடன் நிவர்த்தித் தலமாகவும் விளங்கி வருகிறது. குபேரன், குபேரனுக்கு அதிபதியான திருமகள், அத்தனை செல்வங்களையும் இருவருக்கும் அருளிய சிவபெருமான், ஆகிய மூவருமே ஒரே தலத்தில் ஒரே கருவறையில் எழுந்தருளி இருப்பது ராஜ குபேரர் ஆலயத்தில் மட்டுமே என்பது சிறப்பு. இந்த ஆலயத்தில் திருமகள், சாம்ராஜ்ஜிய லட்சுமியாக வீற்றிருந்து அதிகாரமும் பதவியும் அருள்கிறாள் என்பதும் விசேஷம்.

வறுமை, கடன், பிணி, தடைகள், தோஷங்கள் ஆகிய பகைகளைப் போக்கும் அற்புதமான இந்தத் தலத்தில் வாசகர்கள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெறவும் அவர்களின் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறவும் வேண்டி வாழ்த்துப் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.