கனமழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் புள்ளிகள் சரிசமமாக பகிர்ந்தளிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில், கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் நேபாளம் அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். நேபாளம் அணி இந்திய அணியை வீழ்த்தி ஏதேனும் மாயாஜாலம் செய்யுமா? அல்லது இந்திய அணி நேபாளம் அணியை எளிதாக வீழ்த்தி அடுத்த சுற்றை உறுதி செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்தப் போட்டி பல்லக்கலே மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்திருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பேட்டிங் தேர்வு செய்தார். ஏனென்றால் தலைச்சிறந்த பந்துவீச்சாளர்களாக இருக்கும் ஷாகீன் அப்ரிடி, ராவுஃப் மற்றும் நசீம் ஆகியோர் இருப்பதால் சேஸிங் செய்வது கடினம் மற்றும் மழை அச்சுறுத்தல் இருந்ததால் போட்டியின் முடிவுகள் மாற வாய்ப்புள்ளது என்ற அடிப்படையில் இந்த முடிவை அவர் எடுத்தார். ஆனால், நேபாளம் அணிக்கு எதிராக டாஸ் வெற்றி பெற்றதும் பவுலிங்கை தேர்வு செய்துவிடார் ரோகித்.
அப்போது பேசிய அவர், இந்திய அணி நல்ல நிலையில் இருப்பதாக கூறினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் விளையாடிய விதம் மிகவும் அருமையாக இருந்ததாக தெரிவித்த ரோகித் சர்மா, இஷான் கிஷனின் பேட்டிங்கில் முதிர்ச்சியை பார்க்க முடிந்ததாக பாராட்டு கூறினார். இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் அவர் நம்பிக்கை கொடுக்கும் விதமாக கடந்த போட்டியில் இஷானின் ஆட்டம் இருப்பதாகவும் பெருமிதம் தெரிவித்தார். இதனால், இஷான் கிஷனின் இடம் இந்திய அணியில் ஏறதாழ உறுதியாகிவிட்டதாக பார்க்கப்படுகிறது.
விரைவில் உலக கோப்பை வர இருப்பதால், யுவராஜ் சிங் போன்று ஒரு ஸ்டார் பிளேயர் இந்திய அணியில் வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர். அதற்கு ஏற்ப இடது கை பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் மல்டி டேலண்டேட் பிளேயராக அவர் இருப்பது இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. ரோகித் சர்மாவின் இந்த பாராட்டு இஷான் கிஷனுக்கும் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.