கடந்த ஜீன் மாதத்தில் இருந்து iOS 17 beta நிலையில் இரண்டு வகைகளில் டெவலப்பர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் வெவ்வேறாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு iOS 17 வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 12 ஆப்பிள் நிகழ்ச்சி
செப்டம்பர் 12ம் தேதி ஆப்பிள் இன்க் நிறுவனம் தனது வருடாந்திர நிகழ்வுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதில், ஐபோன் 15 சீரிஸ் மற்றும் இதர ஆப்பிள் தயாரிப்புகளும் வெளியாக உள்ளன. ஐபோன் 15 கண்டிப்பாக iOS 17 அப்டேட்டுடன்தான் வரும் என்ற நிலை உள்ளது. எனவே, iOS 17 அப்டேட்டை ஆப்பிள் நிறுவனம் இன்னும் சில தினங்களில் வெளியிட வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், எந்தெந்த ஐபோன் மாடல்களில் எல்லாம் iOS 17 அப்டேட் வழங்கப்படுகிறது என்ற பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
iOS 17 அப்டேட் பெறப் போகும் ஐபோன் மாடல்கள்
கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி உலக அளவில் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட iPhone 14 Pro, iPhone 14 Pro Max , iPhone 14, iPhone 14 Plusகடந்த 2021ம் ஆண்டு வெளியான iPhone 13 Pro, iPhone 13 Pro Max, iPhone 13, iPhone 13 miniஅக்டோபர் 2020ல் வெளியான iPhone 12 Pro, iPhone 12 Pro Max, iPhone 12, iPhone 12 miniசெப்டம்பர் 2019ம் ஆண்டு வெளியான iPhone 11 Pro, iPhone 11 Pro Max, iPhone 112018ம் ஆண்டில் வெளியான iPhone XS, iPhone XS Max, iPhone XR மற்றும் 2016ம் ஆண்டு வெளியான iPhone SE (2/3) ஆகிய மொபைல்களில் iOS 17 அப்டேட் வர உள்ளன.
iOS 17 அப்டேட்
iOS 17 அப்டேட் வழியாக பல்வேறு புதிய அப்க்ரேடுகள் வர உள்ளன. குறிப்பாக தனித்துவமான கான்ட்டேக்ட் போஸ்டர்கள், ஏர்ட்ராப் ஷேரிங் வசதி, ஈசி கான்ட்டேக்ட் ஷேரிங், வாய்ஸ் மெயில் வசதி என புதிய அப்டேட்டுகள் iOS 17 அப்டேட்டில் உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.