ரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து ரஜினிக்கும், நெல்சனுக்கும் தயாரிப்பாளர் கலாநிதிமாறன் கார் மற்றும் காசோலையை பரிசாக கொடுத்தார். இதையடுத்து தற்போது இசையமைப்பாளர் அனிருத்துக்கு கலாநிதிமாறன் காசோலையை பரிசாக கொடுத்துள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகின்றது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றிநடைபோட்டு வருகின்றது. ரஜினிக்கும் நெல்சனுக்கும் தேவையான வெற்றியை ஜெயிலர் கொடுத்துள்ளது. இப்படம் வெளியான ஒரே வாரத்தில் 375 கோடி வசூலித்து சாதனை படைத்த நிலையில் தற்போது 600 கோடி வசூலை எட்டி புது சாதனையை நிகழ்த்தியுள்ளது.
Nelson dilipkumar: வரலாறு படைத்த ஜெயிலர்..தென்னிந்திய அளவில் சாதனை செய்த நெல்சன்..இதெல்லாம் பெரிய விஷயம்பா..!
இதன் காரணமாக தயாரிப்பாளர் கலாநிதிமாறன் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றார். அதனால் ரஜினிக்கும், நெல்சனுக்கும் விலையுர்ந்த காரை பரிசாக கொடுத்துள்ளார் கலாநிதிமாறன். அதுமட்டுமல்லாமல் காசோலையையும் இருவருக்கும் கலாநிதிமாறன் கொடுத்தார்.
இதையடுத்து ரசிகர்கள் பலரும் அனிருத்துக்கு ஏன் பரிசு கொடுக்கவில்லை என்ற கேள்வியை எழுப்பினர். படத்தின் வெற்றிக்கு ரஜினி மற்றும் நெல்சன் எந்தளவிற்கு முக்கியமான பங்கு வகித்தார்களோ, அதை போல தான் அனிருத்தும் தன் அபாரமான இசையின் மூலம் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். எனவே அவருக்கு பரிசு கொடுத்தே ஆகவேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது கலாநிதிமாறன் அனிருத்துக்கு காசோலையை பரிசாக கொடுத்துள்ளார். இதன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஜெயிலர் படத்திற்கு மட்டுமல்லாமல் கடந்த ஒரு சில ஆண்டுகளாக வெளியாகும் படங்களின் வெற்றிகளுக்கு அனிருத்தின் இசை மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
குறிப்பாக உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வெற்றிக்கும் அனிருத்தின் இசை முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால் விக்ரம் படத்தின் வெற்றிக்கு கமல் லோகேஷ் மற்றும் படக்குழுவினர் பலருக்கு பரிசு வழங்கினார்.ஆனால் அனிருத்துக்கு வழங்கவில்லை. இது ஒருபக்கம் இருக்க தற்போது ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு அனிருத்துக்கு பரிசு வழங்கப்பட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
இதையடுத்து அனிருத்துக்கு கலாநிதிமாறன் எவ்வளவு கொடுத்திருப்பார் என ரசிகர்கள் பேசி வருகின்றனர். அநேகமாக ஒரு கோடி ரூபாயை அனிருத்துக்கு கலாநிதிமாறன் பரிசாக கொடுத்திருப்பார் எனவும் சிலர் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.