கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி வெற்றிகண்டார் நெல்சன். இப்படம் 2018 ஆம் ஆண்டு திரையில் வெளியானது. ஆனால் அதற்கு முன்பே வேட்டை மன்னன் படத்தின் மூலம் நெல்சன் இயக்குனராக அறிமுகமாவதாக இருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் அப்படம் பாதிலேயே கைவிடப்பட்டது.
இருந்தாலும் நெல்சன் தொடர்ந்து போராடி வந்தார். அவரின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி தான் கோலமாவு கோகிலா திரைப்படம் எனலாம். அதன் பிறகு சிவகார்த்திகேயன், விஜய், ரஜினி என உச்ச நட்சத்திரங்களை இயக்கி இன்று இந்தியளவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸதை பெற்றுள்ளார் நெல்சன். என்னதான் விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் நெல்சன் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் ஜெயிலர் படத்தின் மூலம் தரமான கம்பாக்கை கொடுத்துள்ளார்.
வரலாறு படைத்த ஜெயிலர்
மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரஜினிக்கு மட்டுமல்லாமல் நெல்சனுக்கும் தேவையான வெறியை பெற்று தந்தது. அதுவும் சாதாரண வெற்றியாக இல்லாமல் ஹிமாலய வெற்றியை ஜெயிலர் திரைப்படம் பெற்றுள்ளது. இதனால் தயாரிப்பாளர் முதல் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் வரை அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.
Leo vs Jailer: லியோ கண்டிப்பாக ஜெயிலர் வசூலை பீட் பண்ணாது..ஒரு லட்சம் பந்தயம் கட்டிய பிரபல நடிகர்..!
தயாரிப்பாளர் கலாநிதிமாறனுக்கு ஜெயிலர் படத்தினால் பலகோடி லாபம் கிடைத்துள்ளது. அதன் காரணமாக உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கும் கலாநிதிமாறன் நெல்சனுக்கும், ரஜினிக்கும் கார் மற்றும் காசோலைகளை பரிசாக வழங்கியுள்ளார். இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் தற்போது 600 கோடி வசூலித்து புது சாதனை படைத்துள்ளது.
சாதனை செய்த நெல்சன்
இதன் மூலம் நெல்சனும் புது சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது தென்னிந்தியாவிலே இளம் வயதில் 600 கோடி வசூலித்த படத்தை இயக்கிய இயக்குனர் என்ற பெருமையை பெற்றுள்ளார் நெல்சன். இதற்கு முன்பு ராஜமௌலி, ஷங்கர், மணிரத்னம் ஆகியோர் தான் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். அதன் பிறகு ஜெயிலர் படத்தின் மூலம் நெல்சன் இந்த சாதனையை படைத்துள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அதுமட்டுமல்லாமல் இளம் வயதில் இந்த சாதனையை படைத்த இயக்குனர் என்ற பெருமையை நெல்சன் பெற்றுள்ளார். இந்நிலையில் பீஸ்ட் படத்தின் மூலம் கடுமையான விமர்சனங்களை சந்தித்த நெல்சன் ஜெயிலர் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் சாதனை படைத்து கம்பாக் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என அனைவர்க்கும் உணர்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.