Weibo தளத்தில் வெளியாகியுள்ள தகவலின்படி, Samsung W சீரிஸ் வெளியீட்டு நிகழ்வை செப்டம்பர் 15ம் தேதி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால், அதில் Samsung W24 மற்றும் Samsung W24 Flip மொபைல்கள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த நிகழ்வில் Samsung W24 மற்றும் Samsung W24 Flip ஆகிய மொபைல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலில் என்ன என்ன சிறப்பம்சங்கள் வெளியாகலாம் என்று டிப்ஸ்டர்கள் வெளியிட்டுள்ள தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Samsung W சீரிஸ் ப்ராசஸர்Samsung W24 மற்றும் Samsung W24 Flip மொபைல்களில் 12GB ரேம் வசதியோடு கூடிய Qualcomm Snapdragon 8 Gen2 ப்ராசஸர் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை மாதம் வெளியான சாம்சங் Galaxy Z Fold 5 மற்றும் Galaxy Z Flip 5 மொபைல்களின் மறுபிராண்டிங் செய்யப்பட்ட மாடல்களாக இவை வெளியாகலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
Samsung W24 கேமராSamsung W24 மாடலில் OIS வசதியோடு கூடிய ட்ரிபிள் ரியர் கேமரா இடம்பெறலாம். அதன்படி, 50 MP + 12 MP + 10 MP பின்புற கேமரா மற்றும், 10MP + 4MP முன்புற கேமரா இடம்பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung W24 பேட்டரி ஸ்டோரேஜ்Samsung W24 மொபைலில் 4500mAh திறன்மிக்க பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற வாய்ப்புள்ளது. இதில் அடிப்படையில் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதி இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Samsung W24 டிஸ்பிளேSamsung W24ல் 7.63இன்ச் AMOLED 2X ஸ்க்ரீன், மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் இடம்பெற வாய்ப்புள்ளது. மேலும், HDR10+ சப்போர்ட், 480Hz டச் சாம்ப்ளிங் ரேட், பஞ்ச் – ஹோல் டிஸ்பிளே ஆகியவையும் இடம்பெறலாம்.