அக்டோபர் 1 முதல் சிம் கார்டு வாங்க புது ரூல்ஸ்! 52 லட்சம் சிம் கார்டுகள் ஆல்ரெடி சஸ்பெண்ட்!

நம்மில் பலருக்கும் சமீப காலங்களில் வித விதமான போன் நம்பர்களில் இருந்து அழைப்புகள் அல்லது மெசேஜ்கள் வந்திருக்கும். பலரும் இது போன்று வரும் போலி அழைப்புகள் மற்றும் பொய்யான மெசேஜ்கள் ஆகியவற்றை நம்பி லட்சக்கணக்கில் பணம் இழந்த கதைகளை கூட கேட்டிருப்போம்.

டிஜிட்டல் உலகில் நாளுக்கு நாள் இது போன்ற தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி மோசடி செய்யும் , பணம்பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்கும் வகையில் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் இனி சிம் வாங்க வேண்டும் என்றால் கீழ்காணும் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று டெலிகாம் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

52 லட்சம் சிம் சஸ்பெண்ட்

சமீபத்தில் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள தகவலின்படி, இதுவரை 66,000 போலி வாட்ஸப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், 67,000 மோசடி சிம் டீலர்கள் ப்ளாக்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளதாகவும், 52 லட்சம் மொபைல் இணைப்புகளை ரத்து செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதில் ஒரே போலி டீலரின் பேரில் நூற்றுக்கணக்கான சிம்கள் வாங்கிய வழக்குகள் உண்டு.

PoS ரெஜிஸ்ட்ரேஷன்

இதுபோன்ற வரைமுறையற்ற மோசடிகளால் நாளுக்கு நாள் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் தொலைத்தொடர்பு துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, டெலிகாம் ஆப்பரேட்டர்கள் வருகின்ற செப்டம்பர் 30ம் தேதிக்கு முன்பு அனைத்து மொபைல் சிம் விற்பனை நிலையங்களையும் பதிவு செய்ய வேண்டும்.

டீலர்களுக்கு 10 லட்சம் அபராதம்

செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் வாடிக்கையாளரின் விவரங்களை பதிவு செய்யாமல் சிம் விற்கும் ஒவ்வொரு டீலருக்கும் 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இதுவரை பதிவுகள் இன்றி ஆக்ட்டிவேட் செய்யப்பட்டுள்ள அனைத்து இணைப்புகளையும் மறுசரிபார்ப்பு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ரெஜிஸ்ட்ரேஷனுக்கு தேவையனவை

டீலர்கள் தங்களை ரெஜிஸ்டர் செய்துகொள்ள CIN நம்பர், LLPIN நம்பர், ஆதார் கார்டு, பேன் கார்டு மற்றும் வரி பதிவு சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இது இல்லாத நபர்கள் தற்போதைக்கு அஃபிடவிட் ஒன்றை சப்மிட் செய்துவிட்டு பின்னால் இந்த விவரங்களை பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், வாடிக்கையாளர்கள் அனைவரின் சான்றுகளும் சரிபார்க்கப்பட்டு போலி சான்றுகளை சப்மிட் செய்து சிம் வாங்கியவர்களின் இணைப்பை ரத்து செய்தல் மற்றும் நடவடிக்கை எடுத்தல் குறித்த வழிகாட்டுதல்களும் வெளியாகியுள்ளது.

மேற்கண்ட விதிமுறைகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருவதால் PoS பதிவுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.