ஆயுத சப்ளை தொடர்பாக புடினை சந்திக்க கிம் ஜோங் உன் முடிவு | Kim Jong Uns decision to meet Putin over arms supply

மாஸ்கோ: தன்னிடம் உள்ள ஆயுதங்களை விற்பது தொடர்பாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவும், வடகொரியாகவும் நட்பு நாடுகளாக உள்ளன. இரு நாட்டு தலைவர்களும் ஏற்கனவே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ரஷ்யா உக்ரைன் மீது போர் நடத்தி வரும் நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது அணு ஆயுதங்களை உக்ரைன் போரில் பயன்படுத்திட ரஷ்யாவிற்கு உதவிடவே கிம்ஜோங் உன் ரஷ்ய பயணம் மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.