ஆளுநருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம்.. உதயநிதி மீது வழக்கு தொடரணும்.. "கலைச்சிடுவேன்"

டெல்லி:
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன சர்ச்சை தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திமுகவை மிரட்டும் வகையிலும் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஒரே வார்த்தையில் இந்தியா முழுவதும் பிரபலமான ஒரே தலைவர் உதயநிதி ஸ்டாலினாக தான் இருக்க முடியும். சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அவர் கூறிய கருத்து நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. சனாதனம் என்றால் இந்து மதம் என்ற மற்றொரு அர்த்தமும் இருப்பதால் இதை வைத்து பாஜகவினர் அரசியல் செய்து வருகின்றனர். அதாவது, இந்து மதத்தினரை படுகொலை செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியதாக பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருவதால் அவருக்கு கடுமையான எதிர்ப்பும் எழுந்திருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸில் ஒருபுறம் புகார் குவிந்துக் கொண்டிருக்க, மற்றொரு புறம், உதயநிதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு முக்கிய பிரமுகர்கள் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

உதயநிதி தலைக்கு 10 கோடி.. சாமியாருக்கு ஆதரவாக பேசிய செல்லூர் ராஜு.. “வன்முறை கிடையாதாம்”

இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

மு.க. ஸ்டாலினின் பேட்டாவும் (மகன்), வாரிசு அரசியலில் அமைச்சராக இருப்பவருமான உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர அனுமதி கோரி தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இன்னொரு முறை அவர் சனாதன தர்மத்தை அவமதிக்கும் வகையில் பேசினால் தமிழ்நாடு அரசை டிஸ்மிஸ் செய்யும் வேலையில் நான் இறங்குவேன். இதை 1991-ம் ஆண்டே (திமுக ஆட்சி கலைப்பு) நான் நிரூபித்துள்ளேன் என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

எதே.. தலைய வெட்டப் போறியா.. “தண்டவாளத்திலேயே தலையை வைக்கிறவங்க நாங்க”.. மாஸ் காட்டிய உதயநிதி

இதேபோல, அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், “தற்கொலை செய்யும் நிலையில் திமுக உள்ளதா? சனாதன தர்மத்தின் மீது முட்டாள்தனமான, தேசவிரோதத் தாக்குதல் நடத்துவது என்பது 1990-91ல் விடுதலைப் புலிகளுக்கு துணையாக இருந்து கருணாநிதி தற்கொலை (ஆட்சி கலைப்பை குறிப்பிடுகிறார்) செய்து கொண்டதை போன்றது ஆகும். அந்த சமயத்தில், நான் ராஜீவ் காந்தி ஆதரவுடன் திமுக ஆட்சியை கலைத்தேன். அந்த வரலாறில் இருந்து கருணாநிதியின் மகன் (மு.க. ஸ்டாலின்) பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் வெறிப்பிடித்தது போல் இந்து மதத்தை எதிர்ப்பதை நிறுத்துங்கள். இல்லாவிட்டால்…” என சுப்பிரமணியன் சுவாமி எச்சரித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.