சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் வரும் 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதில், ஒரே நாடு ஒரே தேர்தல், இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவது, சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல், பெண்கள் இட ஒதுக்கீடு, ஜம்மு & காஷ்மீருக்கான மாநில உரிமையை மறுசீரமைத்தல் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. எனவே இந்த சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்று விவாதிப்பது குறித்து ஆலோசிக்க, இந்தியா கூட்டணிக் கட்சிகள் இன்று மாலை டெல்லியில் ஒன்றுகூடுகின்றனர். இதில் பங்கேற்க தி.மு.க சார்பில் எம்.பி டி.ஆர் பாலு டெல்லி சென்றிருக்கிறார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று இரவு 8 மணிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெறுகிறது. அதில் நாடாளுமன்ற விவாதத்தில் இருக்கும் நடைமுறைச் சிக்கல் குறித்து விவாதிக்கவிருக்குறோம். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பல்வேறு முறை விவாதிக்கப்பட்டுவிட்டது. பல்வேறு சர்ச்சைகளுக்குப் பிறகு ஒவ்வொரு நாடாளுமன்றக் கூட்டத்தின் போதும் இதைக் கொண்டுவருவார்கள். ஆனால் அதை அமல்படுத்தியதியதில்லை.
தற்போது மீண்டும் இதை கையில் எடுத்திருக்கிறார்கள். இந்த முறை அமல்படுத்த முயன்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. மேலும், அதை நடைமுறைப்படுத்துவதும் சாத்தியமில்லை என்பது மட்டுமில்லாமல், நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. சிறப்புக் கூட்டத்தில் எது குறித்துப் பேசப்போகிறார்கள் என எதுவும் தெரியவில்லை. 4 நாள்களில் எதை விவாதிக்க முடியும் என்பதும் தெரியவில்லை. இவர்களின் ஆட்சியில் தான் இந்த விந்தைகள் அரங்கேறுகின்றன.
பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கலாம். இந்தியா என்றப் பெயரை பாரத் என மாற்றியிருக்கிறார்கள். இது அரசியலமைப்பில் இருக்கிறது. அதை பயன்படுத்துவதற்கான உரிமை குடியரசுத் தலைவருக்கும் இருக்கிறது. அதனால் அதை மறுக்கவோ, தவறு எனக் கூறவோ முடியாது. பெரும்பான்மை இருப்பதால் பா.ஜ.க எதுவேண்டுமானாலும் செய்யும். எதிர்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா எனப் பெயர் வைத்ததால் பா.ஜ.க அதைக் கூறுவதற்கு பயப்படுகிறது. தேர்தலின் போது இந்தியா vs மோடி என்றுதான் மக்கள் கூறுவார்கள். பெயர் மாற்றுவதால் தேர்தலில் வெற்றி பெற முடியாது. என்னப் பெயர் மாற்றினாலும், ஒன்றிய அரசு, இந்தியா கூட்டணி என்றுதான் குறிப்பிடுவோம்.” எனத் தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY