கண்டி: இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், அக்.,5 முதல் நவ.,19 வரை 13வது ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.
அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் ஆமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் எதிர்கொள்கிறது.
தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று (செப்.,5) அறிவிக்கப்பட்டது. இலங்கையின் கண்டியில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) 15 வீரர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது. இதில் காயத்தில் இருந்து மீண்டுள்ள விக்கெட் கீப்பர், பேட்டர் லோகேஷ் ராகுல் இடம்பெற்றுள்ளார். இரண்டாவது விக்கெட் கீப்பராக இஷான் கிஷான் தேர்வு செய்யப்படுவதால், சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்திய அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் ஐயர், லோகேஷ் ராகுல், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, பும்ரா, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement