என் புருஷன் இவர் தான் – கணவரை அறிமுகம் செய்த சீரியல் நடிகை தீபா

சின்னத்திரை நடிகை தீபா அன்பே சிவம், நாம் இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட பல தொடர்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். தற்போது பிரியமான தோழி தொடரில் வில்லியாக அதகளம் செய்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். ஆனால், அவரது முதல் திருமணம் தோல்வியில் முடிந்த நிலையில் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று மகனுடன் தனியாக வசித்து வந்தார். எனவே, பல பேட்டிகளிலும் தன்னை சிங்கிள் மதர் என கூறியிருந்தார்.

இந்நிலையில், தீபா ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக சோஷியல் மீடியாக்களில் செய்திகள் உலாவி வந்தது. சின்னத்திரை தொடர்களில் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்து வரும் சாய் கணேஷும் தீபாவும் காதலித்து வந்தனர். ஆனால், பாபுவின் வீட்டில் இந்த திருமணத்துக்கு எதிர்ப்புகள் இருந்ததால் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தெரிய வருகிறது. இதற்கிடையில் தீபா தனது இன்ஸ்டாகிராமில் 'என் புருஷன்' என குறிப்பிட்டு தன் கணவர் சாய்கணேஷ் பாபுவுடன் இருக்கும் புகைப்படங்களை இண்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இதனையடுத்து பிரபலங்களும் ரசிகர்களும் தீபாவின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டுமென வாழ்த்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.