ஆண்ட்ராய்டு மற்றும் iOS-ஆல் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் வாய்ஸ் கால் ரெக்கார்டிங் செய்வதற்கான சில எளிதான மற்றும் சிறந்த வழிகள் இங்கே உள்ளன.
ஆண்ட்ராய்டு மொபைல்: அழைப்புகளை பதிவு செய்வது எப்படி?
பெரும்பாலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களில் அழைப்புப் பதிவு மிகவும் ஈஸியாக இருக்கும். அழைப்புகளே மேற்கொள்ளும்போதே டயல் பேடில் உங்களுக்கு ரெக்கார்டிங் ஆப்சன் இருக்கும். Samsung, Xiaomi மற்றும் Oppo போன்ற மொபைல் கம்பெனி போன்கள் டீபால்ட் செட்டிங்ஸிலேயே ரெக்கார்டிங் ஆப்சனை கொடுத்திருப்பார்கள். அதனை நீங்கள் ஆன் செய்தால் கால் ரெக்கார்டிங் ஆன் ஆகும். அதேநேரத்தில் நீங்கள் கூகுள் டயலர் இருந்து அதில் நீங்கள் கால் ரெக்கார்டிங் செய்தால் எதிர் தரப்பில் இருப்பவர்களுக்கு உங்கள் கால் ரெக்கார்டு செய்வது தெரியும்.
இதுவே டீபால்ட் செயலிகள் அல்லாமல் இருக்கும் மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் டயலரை இயக்கினால் எதிரில் இருப்பவரை எச்சரிக்காமல் அழைப்பு பதிவைத் தொடங்கலாம். இது பயனரின் தனியுரிமையை மீறுவது என்றாலும், பெரும்பாலானோர் இந்த குரல் அழைப்பு பதிவு முறையை விரும்புகிறார்கள்.
ஐபோன்களில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி?
ஆண்ட்ராய்டு போலல்லாமல், iOS சாதனங்களில் நேட்டிவ் கால் ரெக்கார்டிங்கை Apple ஆதரிக்காது. மூன்றாம் தரப்பு பயன்பாட்டைப் பயன்படுத்தி ஒருவர் அதைச் செய்ய வேண்டும். மூன்றாம் தரப்பு பயன்பாட்டின் உதவியின்றி iPhone-களில் குரல் அழைப்புகளைப் பதிவு செய்வதற்கான எளிதான வழிகளில் ஒன்று Voice Memo பயன்பாட்டின் வழியாகும். உங்கள் ஐபோனில் அழைப்பைப் பெறும்போது, அதைப் பெற்று, அதிகபட்ச ஒலியளவில் ஒலிபெருக்கியில் அழைப்பை வைக்கவும், இப்போது, வாய்ஸ் மெமோ பயன்பாட்டைத் திறந்து அழைப்பைப் பதிவுசெய்யத் தொடங்குங்கள்.
இது iOS சாதனங்களில் குரல் அழைப்புகளைப் பதிவு செய்வதற்கான சீக்ரெட் வழி. ஒவ்வொரு அழைப்புக்கும் ரெக்கார்டிங் செய்ய இந்த செட்டிங்ஸை நீங்கள் இயக்க வேண்டும். இதேபோல், குரல் அழைப்புகளை பதிவு செய்ய TapACall Pro அல்லது Call Recorder Lite போன்ற பயன்பாடுகளையும் ஒருவர் பயன்படுத்தலாம். இந்தப் செயலிகளிலும் கூட, ஒவ்வொரு முறையும் அழைப்புப் பதிவை மேனுவலாக செயல்படுத்த வேண்டும். ட்ரூகாலர் அழைப்புப் பதிவுக்கான ஒரு சிறப்பு வழியையும் வழங்குகிறது.