சொத்துக்குவிப்பு வழக்கு
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் கடந்த 2017 ஆம் ஆண்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றனர். அப்போது சிறைத்துறை டி.ஐ.ஜியாக இருந்தபோது ரூபா மோட்கில் அங்குள்ள கைதிகளின் அறைகளில் நேரடியாக ஆய்வு செய்தார்.
சசிகலா ஷாப்பிங்
அதில் சசிகலா மற்றும் இளவரசிக்கு சிறையில் வசதிகள் செய்யப்பட்டு கொடுத்திருப்பது தெரியவந்தது. மேலும் சசிகலா சிறையில் இருந்து சாதாரண உடையில் இளவரசியுடன் சேர்ந்து வெளியே ஷாப்பிங் சென்று வந்த வீடியோக்கள் வெளியானது.
திருப்பதி பிரமோற்சவம்… கையெழுத்தான ஒப்பந்தம்… 300 சிறப்பு பேருந்துகள்… வெளியான அதிரடி அறிவிப்பு!
விசாரணை குழு
இதேபோல் சிறையில் ஒரு தண்டனை கைதியை போல் இல்லாமல் பல்வேறு சொகுசு வசதிகளை இருவரும் அனுபவித்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் இதுதொடர்பாக விசாரிக்க கர்நாடக அரசு விசாரணை குழு ஒன்றை அமைத்தது.
ரூ.2 கோடி லஞ்சம்
அந்தக் குழுவும், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன என அறிக்கை அளித்தது.
சிறைத்துறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சொகுசு வசதிகளை அனுபவித்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி தேவஸ்தானத்தின் சூப்பர் அறிவிப்பு… இதை எதிர்பார்க்கலயே… கொண்டாடும் பக்தர்கள்!
பிடிவாரண்ட்
இதுதொடர்பான வழக்கு பெங்களூரு லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விகே சசிகலா மற்றும் இளவரசி இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணைக்கு நேரில் ஆஜராகாத சசிகலா மற்றும் இளவரசிக்கு பெங்களூரு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
பெரும் பரபரப்பு
மேலும், இருவருக்காகவும் ஜாமின் கையெழுத்திட்ட நபர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப பெங்களூரு லோக் ஆயுக்தா நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. விகே சசிகலா மற்றும் இளவரசி ஆகியோரை கைது செய்ய கர்நாடக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ? உண்டியல்ல இருந்து கைய எடுங்க’ உதயநிதியை விளாசிய கஸ்தூரி!