‘பாகுபலி’ படத்தின் மூலம் பான் இந்திய நடிகராக மாறியவர் பிரபாஸ். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான படங்கள் எதுவும் எதிர்பாராத வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து தற்போது நடித்து வரும் ‘சலார்’ படத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார் பிரபாஸ். இந்நிலையில் இந்தப்படத்தின் ரிலீசில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபாஸ் நடிப்பில் தற்போது ‘சலார்’ படம் உருவாகியுள்ளது. ‘கேஜிஎப்’ புகழ் பிரசாந்த் நீலின் அடுத்த படைப்பாக இந்தப்படம் உருவாகியுள்ளது. ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயார் ஆகியுள்ளது ‘சலார்’.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
கேஜிஎப் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கி பான் இந்திய அளவில் பிரபலம் ஆகிவிட்டார் பிரசாந்த் நீல். இந்த இரண்டு படங்களுள் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து இந்திய திரையுலகிலே புதிய பெஞ் மார்க்கை உருவாக்கியது. இதனாலே அனைவருக்கும் தெரிந்த இயக்குனர் ஆகிவிட்டார். இதனையடுத்து தற்போது மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘சலார்’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்தப்படத்தில் பிரபாஸ், பிருத்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் ஓய்நைந்து நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகியுள்ளது. அத்துடன் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் மிகுந்த பொருட்செலவில் இந்தப்படம் தயார் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Salaar: ‘கேஜிஎஃப்’ மூன்றாம் பாகமா..?: ‘சலார்’ டீசரில் இதையெல்லாம் நோட் பண்ணீங்களா.!
‘சலார்’ படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில் வெளியீட்டு தேதி தற்போது டிசம்பர் மாதம் தள்ளி போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். படத்தின் விஎப்எக்ஸ் பணிகள் தாமதம் ஆவதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவசர கதியில் படத்தை முடிக்க வேண்டும் என்றும் பிரசாந்த் நீல் முடிவு செய்துள்ளாராம்.
‘சலார்’ படம் ரிலீஸ் தள்ளி போயுள்ள நிலையில் தமிழில் பல படங்கள் அந்த தேதியில் ரிலீசாக வரிசைக்கட்டியுள்ளன. அந்த வரிசையில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் அஹமத் இயக்கியுள்ள ‘இறைவன்’, சித்தார்த்தின் ‘சித்தா’, ஹரிஸ் கல்யாணின் ‘பார்க்கிங்’, அமீர் நடித்துள்ள ‘உயிர் தமிழுக்கு’, விஜய் ஆண்டனியின் ‘கொலை’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஒரே நாளில் ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
வசூலை குவிக்கும் ‘குஷி’: விஜய் தேவரகொண்டா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!