தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான ரஜினியின் மூத்த மகளான தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தான் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்களின் பிரிவை அறிவித்தனர். இதனையடுத்து யாத்ரா, லிங்கா இருவரும் அப்பா, அம்மாவுடன் மாறி மாறி இருந்து வருகின்றனர். இந்நிலையில் யாத்ரா தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா , சௌந்தர்யா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவருமே இயக்குனர்களாக வலம் வருகின்றனர். நீண்ட காலமாக இயக்கத்தில் இருந்து விலகியிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ படம் மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பியுள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்நிலையில் பங்ஷனில் ஒன்றில் தனது மகன் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தன்னை விட மகன் கிடுகிடுவென உயரமாக வளர்ந்துள்ளதை ஆச்சரியமாக பார்ப்பதை போன்று வெளியாகியுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
ரசிகர்களும் இந்த புகைப்படத்திற்கு பல கமெண்ட்களை குவித்து வருகின்றனர். யாத்ரா பார்க்க அப்படியே ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் சாயலில் இருப்பதாக கூறி வருகின்றனர். அத்துடன் சூப்பர் ஸ்டார் வீட்டில் இருந்து அடுத்த ஹீரோ ரெடி ஆகிட்டார் போல.! சீக்கிரமே அம்மா ஐஸ்வர்யா இயக்கத்தில் யாத்ரா நடிப்பார் போல எனவும் கூறி வருகின்றனர் ரசிகர்கள்.
‘லால் சலாம்’ படப்பிடிப்பை முடித்த கையோடு ரஜினி செய்துள்ள காரியம்: தீயாய் பரவும் புகைப்படம்.!
மேலும் இந்த லேட்டஸ்ட் போட்டோவுக்கு திரையுலக பிரபலங்களும் லைக், கமெண்ட்கள் போட்டு வருகின்றனர். நடிகை அதிதி ராவ் ஹைதரியும் மகன் ரொம்ப உயரமா வளர்ந்துட்டாரே என தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி உள்ளார். அத்துடன் நடிகை ராதிகா, ஸ்ரீதேவி விஜயகுமார் உள்ளிட்டோரும் இந்த போட்டோவிற்கு கமெண்ட்களை குவித்து வருகின்றனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி முடிந்துள்ளர். விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ளது இப்படம்.
View this post on InstagramA post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)
மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியராக முக்கியமான கேரக்டரில் ரஜினி நடித்துள்ளார். இதனாலே இந்தப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அத்துடன் லைகா நிறுவனம் தயாரித்துள்ள ‘லால் சலாம்’ படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.
Aishwarya Rajinikanth: இது தற்செயலானது அல்ல.. ஆரம்பித்த இடத்திலே முடிந்தது: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.!