தமிழ்நாட்டின் சிறு நகரங்களில் சூப்பர் திட்டம்.. உள்ளூரில் வேலைவாய்ப்பு – மாணவர்களுக்கு குட்நியூஸ்!

தமிழ்நாட்டில் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் சென்னையை மையமாக வைத்தே அமைந்துள்ளன. இதனால் கல்வியை வேறு மாவட்டங்களில் பயின்ற மாணவர்கள் வேலைவாய்ப்புக்காக சென்னை வரவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர்.

தமிழ்நாட்டில் சென்னை மட்டுமல்லாமல் கோவை, மதுரை, திருச்சி என நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. சாலை போக்குவரத்து, விமான போக்குவரத்து போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு உயர்கல்வியில் தேசிய அளவில் முன்னணியில் உள்ளது. இதனால் ஐடி உள்ளிட்ட பிற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு திறமைமிக்க இளைஞர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலிருந்தும், கிராமங்களிலிருந்தும் அதிகளவில் வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி, மும்பை போன்ற பெரிய நகரங்களுக்கு அடுத்தபடியாக குறிப்பிட்ட சில மாநிலங்களில் இரண்டாம் நிலை நகரங்களிலும் ஐடி நிறுவனங்கள் கால் பதித்து வருகின்றன என்று நாஸ்காம் – டெலாய்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களில் ஐடி நிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் மருந்து பொருட்கள் கண்காட்சியில் 100 நிறுவனங்கள் பங்கேற்பு

இரண்டாம் நிலை நகரங்களில் இந்த நிறுவனங்கள் தங்கள் கிளைகளை அமைப்பதற்கு நிறைய பலன்கள் உள்ளன. குறைவான சம்பளத்திற்கு திறமையான இளைஞர்கள் நிறைய கிடைக்கின்றனர். வாடகை செலவு மிகவும் குறைவு. நிறுவனங்களுக்கு இது சாதகம் என்றால் இளைஞர்களுக்கும் நிறைய பலன்கள் உள்ளன.

சென்னை போன்ற பெருநகரங்களுக்கு வேலைக்காக செல்பவர்கள் அங்கு அறை எடுத்து தங்க வேண்டும், அல்லது விடுதியில் சேர வேண்டும், விடுமுறை தினங்களில் சொந்த ஊருக்கு சென்று திரும்ப வேண்டும், உணவு உள்ளிட்ட அடிப்படைக் காரணிகளுக்கும் அதிகமாக செலவிட வேண்டியிருக்கும் இவை எல்லாம் சிறு நகரங்களில் இவ்வளவு அதிகம் இல்லை.

வெளியூர் சென்று வேலை பார்க்க வேண்டும் என்பதால் பெண்களை குடும்பத்தினர் அனுப்ப யோசிக்கலாம், சிறு நகரங்களில் நிறுவனங்கள் தொழில் போது வேலைக்கு செல்லும்பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். அதனால் பொருளாதரா ரீதியாக மட்டுமல்லாமல் சமூக ரீதியாகவும் பெரிய மாற்றம் நிகழும்.

தமிழக அரசு சிறு நகரங்களை குறிவைத்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது கோவை, மதுரை, திருச்சி, வேலூர் போன்ற நகரங்கள் மட்டுமல்லாமல் மேலும் பல நகரங்களில் ஐடி நிறுவனங்கள் கிளைபரப்பும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.