தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை? வானிலை ஆய்வு மையம் ரிப்போர்ட்!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (செப்டம்பர் 5) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் என நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளைய தினம் (செப்டம்பர் 6) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி, திண்டுக்கல், தேனி என நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் (செப்டம்பர் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை மூன்று நாள்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி என ஆறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது

ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை

இன்று முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் இன்றும் நாளையும் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சின்னக்கல்லார், வால்பாறை, சின்கோனா ஆகிய பகுதிகளில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.சோலையாறில் 3 செ.மீ மழையும், மகாபலிபுரம், செம்பனார் கோயில், அடையாறு, மங்களபுரம், திருக்கழுகுன்றம் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

வெப்பநிலையை பொறுத்தவரை நேற்று அதிகபட்சமாக தொண்டியில் 35.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.