திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சர்வ தரிசனத்திற்கு பக்தர்கள் 24 மணிநேரத்திற்கு மேல் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதிதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 18 ஆம் தேதி வருடாந்திர பிரமோற்சவம் தொடங்கவுள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பிரமோற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். பிரமோற்சவம் நடைபெறும் 9 நாட்களுமே ஒவ்வொரு நாளும் ஒரு வாகனம் என சாமி ஊர்வலம் நடைபெறும்.சாமி வீதி உலாகாலை மற்றும் இரவு என இரு நேரமும் மலையப்ப சாமி வீதி உலா நடைபெறும். இதனால் க்யூவில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய முடியாத பக்தர்கள் மாட வீதிகள் உலா வரும் சாமியை தரிசனம் செய்ய திருமலை குவிந்து விடுவார்கள். இதனால் திருமலையில் கால் வைக்க கூட இடம் இல்லாத தளவுக்கு கூட்டம் நிரம்பி வழியும்.
செம பர்ஃபாமில் ஆதித்யா எல் 1… இஸ்ரோ கொடுத்த சூப்பர் அப்டேட்!தேவஸ்தானம் ஏற்பாடு
இதனை முன்னிட்டு பக்தர்கள் கூட்டத்தை சாமாளிக்கவும் சாமானிய மக்களும் எளிமையாக சாமி தரிசனம் செய்யவும் தேவஸ்தான நிர்வாகம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. பிரமோற்சவம் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது.
திங்கள் கிழமை கூட்டம்திங்கள் கிழமையான நேற்று 24 மணிநேரத்திற்கும் மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருக்கும் வைகுந்தம் காம்ப்ளக்ஸின் 26 காம்ப்பார்ட்மெண்டுகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. 300 ரூபாய் கட்டணத்தில் செல்லும் விரைவு தரிசனத்திற்காக பக்தர்கள் 2 முதல் 3 மணி நேரம் காத்திருந்தனர்.
இந்து மதம் வாழைப்பழம்… சனாதனம் வாழைப்பழத்தோல்… சர்ச்சைக்கு நடுவே சேகர்பாபு விளக்கம்!சுமார் 76000 பேர் தரிசனம்இதேபோல் நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களும் 2 முதல் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திங்கள்கிழமையான நேற்று 76,555 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஸ்ரீவாரி உண்டியலில் நேற்று 4.75 கோடி ரூபாய் வசூலானது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சசிகலா, இளவரசிக்கு பிடி வாரண்ட்… பெங்களூரு சிறையில் சொகுசு வாழ்க்கை வழக்கில் நீதிமன்றம் அதிரடி!
மேலும் அதிகரித்த கூட்டம்
33,488 பக்தர்கள் சாமி தரிசனம் செய்து முடி காணிக்கை செலுத்தினர். இந்நிலையில் திருமலையில் இன்று பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது. சுவாமியை தரிசனம் செய்ய வைகுந்தம் காம்ப்ளக்ஸின் 31 கம்ப்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் காத்திருந்தனர். இன்று டோக்கன் இல்லாத பக்தர்கள் சர்வ தரிசனம் செய்ய 24 மணி நேரத்திற்கு மேல் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.1000 கோடி நன்கொடைஇதனிடையே திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நான்கு ஆண்டுகளில் 1000 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. இந்த ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு 4 ஆண்டுகளில் 970 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. அந்தப் பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ததன் மூலம் சுமார் 30 கோடி ரூபாய் வட்டியும் கிடைத்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பதிக்கு 300 சிறப்பு பேருந்துகள்.. கையெழுத்தான ஒப்பந்தம்.. வெளியான அதிரடி அறிவிப்பு!எவ்வளவு நன்கொடை?
நாடு முழுவதும் ஏழுமலையான் கோவில்களை கட்டுவது, பழைய கோவில்களை புனரமைப்பது போன்றவற்றிற்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு 26 கோடியே 25 லட்ச ரூபாய் நன்கொடையாக கிடைத்தது.
இந்த ஆண்டு மட்டும்2020 ஆம் ஆண்டு 70 கோடியே 21 லட்ச ரூபாயும், 2021 ஆம் ஆண்டு 176 கோடி ரூபாயும் பக்தர்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர். 2022 ஆம் ஆண்டு 282 கோடியே 64 லட்ச ரூபாய் வழங்கப்பட்டிருந்தது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தற்போது வரை 268 கோடியே 35 லட்சம் நன்கொடையாக பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானத்தின் சூப்பர் அறிவிப்பு… இதை எதிர்பார்க்கலயே… கொண்டாடும் பக்தர்கள்!டாக்டர் சங்கர்
இதனிடையே திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினரான பதவியேற்ற சென்னையை சேர்ந்த டாக்டர் சங்கர், சென்னையில் இருந்து வாரம் ஒரு முறை 14 பேரை தன்னுடைய சொந்த செலவில் 300 ரூபாய் தரிசனத்தின் மூலம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஏற்பாடு செய்து கொடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உதவ காத்திருக்கிறேன்தமிழ்நாட்டில் இருந்து பாதயாத்திரை ஆக திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறிய அறங்காவலர் குழு உறுப்பினர் சங்கர், திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையான் தரிசன வாய்ப்பு கிடைக்காத பக்தர்கள் எந்த நேரத்திலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர்களுக்கு உதவ காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டவர்களில் சென்னையை சேர்ந்தவரான டாக்டர் சங்கர் கடந்த 3ஆம் தேதி ஏழுமலையான் கோவிலில் பதவி ஏற்று கொண்டார்.
‘இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ? உண்டியல்ல இருந்து கைய எடுங்க’ உதயநிதியை விளாசிய கஸ்தூரி!