புதின் உடன் சந்திப்பு : கவச ரயிலில் ரஷ்யா செல்லும் கிம் ஜோங் உன் – ஓ கதை அப்படி போகுதா?

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரில் உக்ரைன் பக்கமே பல நாடுகள் நிற்க, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு ஆதரவாக சில நாடுகளே உள்ளன. இந்த நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார் வடகொரிய அதிபர் கிம் ஜோன் உன். இரு நாடுகளும் பரஸ்பர உதவிகளை நாடுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போர்ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ச்சியாக போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து உதவிகள் வழங்கி வருகின்றன. அதேபோல ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. போரை நிறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா உள்ளிட்ட நடுநிலை வகிக்கும் நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
ரஷ்யாவின் அவசரத் தேவைஎனினும் ஒராண்டைக் கடந்து போர் நடைபெற்று வருகிறது. முதலில் மிகப்பெரிய ரஷ்ய படைகளிடம் தாக்கு பிடிக்க முடியாமல் உக்ரைன் படைகள் பின்னடைவை சந்தித்தாலும், பின்னர் அதனை சமாளித்து தற்போது வரை பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் படையை பலப்படுத்த ஆயுதங்களின் தேவை அவசியமானதாக மாறியுள்ளது.
ரஷ்யா செல்லும் கிம்இந்த நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் களமிறங்கியுள்ளார். ரஷ்யா மற்றும் வடகொரியா இடையேயான ராணுவப் பேச்சுவார்த்தை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மிக மிக அரிதாகவே வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளும் கிம் ஜாங் உன் ரஷ்யாவுக்கு சென்று அந்நாட்டு அதிபர் புதினை நேரில் சந்திக்கவுள்ளார்.
தயாராகும் கவச ரயில்இதற்காக இம்மாத இறுதியில் கவச ரயிலில் வட கொரியாவில் இருந்து மிக நீண்ட தூரத்தில் உள்ள விளாடிவோஸ்டாக் கடற்கரை நகரத்திற்கு கிம் வருகிறார். கவச ரயிலில் உயர் தொழில்நுட்பங்கள், செயற்கை கோள் தொலைபேசி என பல்வேறு வசதிகள் உள்ளன. விளாடிவோஸ்டாக்கில் வைத்து ரஷ்யாவுக்கு ராணுவ தளவாடங்கள் தருவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.இருதரப்பு பேச்சுவார்த்தைவடகொரியாவிடம் இருந்து பீரங்கி குண்டுகள் மற்றும் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையும் கேட்டுப் பெறவுள்ளார் புதின். அதுபோலவே கிம் ஜாங் உன் தனது நாட்டிற்காக செயற்கைக்கோளுக்கான மேம்பட்ட தொழில்நுட்பத்தையும், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களையும், ஏழ்மையில் உள்ள தனது நாட்டிற்கு உணவுப் பொருட்கள் உதவியையும் கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ரஷ்யாவிலுள்ள தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் குழுவுக்கு, ராக்கெட் லாஞ்சர்களையும், ஏவுகணைகளையும் வடகொரியா வழங்கியது குறிப்பிடத்தக்கது.ஜெலான்ஸ்கி புதிய வியூகம்இந்த நாட்டுத் தலைவர்கள் சந்திப்பு தொடர்பான அடுத்தடுத்த முன்னேற்றங்களை அமெரிக்கா கூர்ந்து கவனித்து வருகிறது. இதனிடையே ரஷ்யாவை தோற்கடிக்க புதிய அணுகுமுறையை கையாள வேண்டும் என்பதற்காக உக்ரைன் அதிபர் ஜெலான்ஸ்கி அழைப்பு விடுத்ததை அடுத்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் தனது பதவி ராஜினாமா செய்தார். இந்த நிலையில்தான் புதின் – கிம் சந்திப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.