தங்கவயல் : மிகவும் மோசமான ரயில் நிலையம் என, பெயர் பெற்றிருந்த பெமல் ரயில் நிலையம், தற்போது அதிநவீனமயமாக்கப்பட்டது. புதிய டிக்கெட் கவுன்டர் இன்று திறக்கப்படுகிறது.
தங்கவயல் நகரின் ஐந்து ரயில் நிலையங்களில் பெமல் ரயில் நிலையம் ஒன்றாகும். பெமல் நகர சுற்றுப்பகுதிகளின், லே – அவுட்களின் மக்களுக்கும், பெமல் தொழிலாளர்களுக்கும், இந்த ரயில் நிலையம் வெகு அருகில் உள்ளது.
இத்தகைய ரயில் நிலையத்தில் கழிப்பறை, மின் விளக்கு உட்பட எந்த வசதிகளும் இல்லாமல் இருந்தது. இரவில் பெங்களூரில் இருந்து வரும் ரயில்களின் வெளிச்சமே, பெமல் ரயில் நிலையத்தின் விளக்காக இருந்தது. ரயில் சென்ற பின், அப்பகுதி முழுதும் இருள் சூழ்ந்துவிடும்.
தற்போது ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதிதாக கழிப்பறையுடன் கூடிய, டிக்கெட் கவுன்டர் கட்டப்பட்டுள்ளது. மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையத்தின் கதவு அருகில் வளர்ந்து கிடந்த தேவையற்ற செடிகளை அகற்றி, சுத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய டிக்கெட் கவுன்டர் இன்று திறக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement