மாணவனின் உயிரை பறித்த ஒரே ஒரு 'சிப்ஸ்'.. அப்படி என்ன சிப்ஸ் அது..? பெற்றோர்களே உஷார்

நியூயார்க்:
ஒரே ஒரு சிப்ஸை சாப்பிட்டு மாணவன் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அந்த சிப்ஸ் குறித்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைக்கு இளம் தலைமுறையினர் மத்தியில் இரண்டு விஷயம் மிகவும் ஃபேமஸ். ஒன்று, வீடியோ ரீல்ஸ் செய்வது. மற்றொன்று, சேலஞ்ச் என்ற பெயரில் ஏதாவது கோமாளித்தனத்தை செய்வது. இந்த இரண்டும் சாதாரண பொழுதுபோக்கு தானே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. இந்த இரண்டு விஷயங்களால் உலகில் தினமும் ஏராளமான உயிர்கள் போய்க் கொண்டிருக்கின்றன.

அப்படி சமீபகாலமாக ‘ஒன் சிப்’ சேலஞ்ச் (one chip challenge) என்பது இந்தியா உட்பட பல நாடுகளில் பரவி வருகிறது. இந்த சேலஞ்சில் கலந்துகொள்பவர்கள் ‘பேக்யு’ என்ற பெயரில் வரும் சிப்ஸை சாப்பிட வேண்டும். இந்த சிப்ஸ் நீங்கள் நினைப்பது போல சாதாரண சிப்ஸ் அல்ல.

அமெரிக்காவின் காரோலினா மாகாணத்தில் உள்ள காட்டில் விளையும் மிகக் காரமான மிளகை கொண்டு செய்யப்படுவது ஆகும். இன்றைய சூழலில் உலகிலேயே அதிக காரமான சிப்ஸ் இதுதான்.

இந்த சிப்ஸ் பாக்கெட்டே சவப்பெட்டி வடிவத்தில்தான் செய்யப்பட்டிருக்கும். இந்நிலையில், அமெரிக்காவின் மசாச்சூஸ்ஸெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஹாரிஸ் வொலோபா என்ற 14 வயது மாணவன் இரு தினங்களுக்கு முன்பு நண்பர்களின் இந்த சேலஞ்சை ஏற்றுக்கொண்டு ‘பேக்யு’ சிப்ஸை சாப்பிட்டுள்ளான். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே அந்த மாணவனுக்கு தலை சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட ஹாரிஸ் வோல்பா ஒரு மணிநேரத்திலேயே வயிற்று வலியால் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்திருக்கிறான்.

இதையடுத்து, அவனது தாயார் இதுதொடர்பாக போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த ஒன் சிப் சேலஞ்சால் பல நாடுகளில் உயிரிழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலும் இந்த ஒன் சிப் சேலஞ்சில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஒரே ஒரு சிப்ஸின் விலை ரூ.3612 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிப்ஸை தடை செய்ய வேண்டும் என உலகம் முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.