முப்பரிமாணத்தில் விக்ரம் லேண்டர் ரோவர் எடுத்த புகைப்படம் : இஸ்ரோ வெளியீடு| Photo by Vikram Lander Rover in 3D : ISRO Release

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பெங்களூரு: நிலவின்மேற்பரப்பில் இருக்கும் விக்ரம் லேண்டரின் முப்பரிமாணத்தை புகைப்படம் எடுத்து ரோவர் அனுப்பி வைத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

இஸ்ரோ வெளியிட்டு அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது:சந்திரயான் – 3 விண்கலத்தின், ‘விக்ரம் லேண்டர்’ கலன் கடந்த மாதம் 23ம் தேதி நிலவில் தரை இறங்கியதும், அதன் உள்ளே இருந்த, ‘பிரஜ்ஞான் ரோவர்’ கலன் வெளியேறி நிலவில் சோதனை மேற்கொள்ள துவங்கியது.

அதற்கு விதிக்கப்பட்டு இருந்த அனைத்து சோதனைகளையும் ரோவர் கலன் செய்து முடித்ததை அடுத்து, கடந்த 2ம் தேதியன்று, ‘ஸ்லீப் மோட்’ எனப்படும் உறக்க நிலைக்கு ரோவர் கலன் மாற்றப்பட்டது.

தற்போது நிலவில் இரவு துவங்க உள்ளது. அப்போது, அங்கு கடுங்குளிர் நிலவும். அந்த நேரத்தில் லேண்டர், ரோவர் கலன்கள் செயலிழந்து போகும்.

எனவே, லேண்டர் கலனின் செயல்பாடுகளை சற்று உசுப்பி விடுவதற்காக, விக்ரம் லேண்டர் கலனின் இயந்திரம் மீண்டும் உயிர் பெற்றது.
இந்நிலையில் பிரக்யான் ரோவர் நேவ்கேம் ஸ்டீரியோ முறையி்ல் நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரின் மிக துல்லியமாக ஆக., 30ம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படத்தை இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவித்து உள்ளது.மேலும் 3டி கண்ணாடி அணிந்து புகைப்படத்தை பார்த்தால் முப்பரிமாண அனுபவம் கிடைக்கும் எனவும், நிலவில் உறக்க நிலைக்கு செல்லும் முன் ரோவர் எடுத்துள்ள புகைப்படம் இது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.