Jailer story: ஜெயிலர் படத்தின் கதை குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.
ஜெயிலர்நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸான விக்ரம் படத்தின் கதையும் ஜெயிலர் கதையும் ஒரே மாதிரியாக இருக்கிறதே என பேச்சு கிளம்பியது. இந்நிலையில் இது குறித்து நெல்சன் திலீப்குமார் விளக்கம் அளித்துள்ளார்.பவன் கல்யாண்ஆந்திராவை அதிர வைக்கும் பவன் கல்யாணின் பிறந்தநாள் கொண்டாட்டம்கதைகதை குறித்து நெல்சன் திலீப்குமார் கூறியிருப்பதாவது, நான் கடந்த ஆண்டு ஜனவரி மாதமே ஜெயிலர் கதையை லோகேஷ் கனகராஜிடம் கூறினேன். என்னுடைய விக்ரம் படத்தை பார் என்றார் அவர். விக்ரமில் இருக்கும் விஷயங்களை கூறினார். இரண்டு படத்தின் துவக்கமும் ஒரே மாதிரி இருந்தாலும் கதை நகர நகர வேறு மாதிரி செல்லும் என்றேன். நான் வேண்டும் என்றே செய்யவில்லை ஆனால் இரண்டு படங்களும் ஒரே மாதிரி முடிந்தால் எதையும் மாற்ற நான் விரும்பவில்லை. அப்படி மாற்றினால் ஸ்க்ரிப்ட்டில் பிரச்சனையாகிவிடும். இரண்டு படங்களும் நன்றாக இருந்தால் இரண்டையுமே மக்கள் ரசிப்பார்கள் என நினைத்தேன் என்றார்.
நெல்சன்விக்ரம் படம் 2022ம் ஆண்டு ஜூன் மாதம் ரிலீஸானது. நான் லோகேஷிடம் கதை சொன்னது 2022ம் ஆண்டு ஜனவரியில். ஜெயிலர் பட வெற்றியால் என்னுள் ஒரு அமைதி ஏற்பட்டிருக்கிறது. எதுவுமே நடக்காதது போன்று அமைதியாக இருக்கிறீர்களே என அனிருத் கூட தெரிவித்தார் என்றார் நெல்சன் திலீப்குமார்.
ரஜினிவிக்ரம் படத்தில் முன்னாள் அன்டர்கவர் ஏஜெண்டான கமல் ஹாசன் தன் மகனின் மரணத்திற்கு காரணமானவர்களை தேடிக் கண்டுபிடித்து பழிவாங்குவார். அதற்காக தன்னுடன் வேலை செய்த நண்பர்களின் உதவியை நாடுவார். ஜெயிலரிலும் தன் மகனுக்காக வேட்டையாட கிளம்புவார் ரஜினி. அந்த வேட்டையில் தன் நண்பர்களின் உதவியை நாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ. 600 கோடி வசூல்ஜெயிலர் படம் உலக அளவில் ரூ. 600 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பது அதை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. லாபம் கிடைத்துவிட்டதை அடுத்து அதில் இருந்து ரூ. 100 கோடியை ரஜினிக்கு கொடுத்திருக்கிறார்கள். மேலும் ரூ. 1.51 கோடி மதிப்புள்ள பி.எம்.டபுள்யூ. எக்ஸ் 7 காரை ரஜினிக்கு பரிசாக கொடுத்திருக்கிறார் கலாநிதிமாறன்.
ரஜினியின் தலைவர் 170 பற்றி இந்த விஷயம் மட்டும் தெரிந்தால் மெர்சலாகிடுவீங்க
சாதனைரிலீஸான குறைந்த நாட்களிலேயே ரூ. 600 கோடி வசூலித்த இரண்டாவது தமிழ் படம் ஜெயிலர் ஆகும். முன்னதாக ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான 2.0 படம் தான் அதிவேகத்தில் ரூ. 600 கோடி வசூல் செய்த முதல் தமிழ் படமாகும். 2.0 படத்தின் சாதனையை ரஜினியின் தலைவர் 170 படம் முறியடிக்குமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஜெயிலரை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.
அடேங்கப்பா, வசூலில் இத்தனை சாதனைகளா!: ஜெயிலர் சாதனைகளை எண்ண விரல்கள் பத்தலயே