விஜய் தேவரகொண்டா சமந்தா நடிப்பில் உருவாகி மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி இருந்த ‘குஷி’ படம் கடந்த வாரம் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்தப்படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா இடையேயான கெமிஸ்ட்ரி காட்சிகள் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘குஷி’ படத்தின் வெற்றி குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா குட் நியூஸ் ஒன்றை கூறியுள்ளார்.
‘லைகர்’ படத்தின் தோல்வியை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா ‘குஷி’ படத்தில் நடித்தார். அவருக்கு ஜோடியாக சமந்தா இந்தப்படத்தில் நடித்தார். லவ் ஸ்டோரியாக உருவாகி மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பிய இந்தப்படத்தில் விஜய், சமந்தா இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என்பதை ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்தப்படத்தின் பாடல்கள் எல்லாம் வெளியாகி வரவேற்பை கிளப்பி இருந்த நிலையில் கடந்த 1 ஆம் தேதி ‘குஷி’ படம் திரையரங்குகளில் வெளியானது. ரொமாண்டிக் ஜானரில் லவ் ஸ்டோரியாக கடந்த வாரம் வெளியானது ‘குஷி’. இந்தப்படம் விமர்சகர்கள் மத்தியில் பெரிதான வரவேற்பை பெறாத நிலையில் பாக்ஸ் ஆபிஸில் படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்தப்படம் ரிலீசான 3 நாட்களிலே உலக அளவில் ரூ. 70.23 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழுவினரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, ‘நீங்களும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள். நானும் சந்தோஷமாக இருக்கிறேன்.
தளபதியின் ‘குஷி’ படம் போல.. விஜய் தேவரகொண்டாவின் ஆசை நிறைவேறுமா.?
உங்களுடன் என்னுடைய மகிழ்சியை பகிரும் விதமாக ‘குஷி’ படத்தின் என் ஊதியத்தில் இருந்து ரூ. 1 கோடியை 100 ரசிகர்களின் குடும்பங்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளேன். அடுத்து வரும் பத்து நாட்களில் கஷ்டப்படும் ரசிகர்களின் 100 குடும்பங்களை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளேன்.
என்னுடைய வெற்றி, சந்தோசம், சம்பளம் அனைத்தையும் உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன். அடுத்த பத்து நாட்களில் ‘குஷி’ வெற்றி விழா ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.அதற்கு முன்பாக இந்த தொகை 100 குடும்பங்களுக்கு சென்றடையும். இது நிறைவடைந்தால் தான் படத்தின் வெற்றி எனக்கு முழுமையடையும் என தெரிவித்துள்ளார். விஜய் தேவரகொண்டாவின் இந்த பேச்சு சோஷியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
‘ஜெயிலர்’ வசூல் வேட்டைக்கு மத்தியில் மூன்று நாட்களில் கோடிகளை அள்ளிய ‘குஷி’: எவ்வளவு தெரியுமா.?