மீஞ்சூர் வடசென்னை அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்தில் முதல் யூனிட்டில் 3 அலகுகளின் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது. இதில் 2-வது யூனிட்டில் இரண்டாவது அலகில் உள்ள ஜெனரேட்டர் செயல்பட்டு டிரான்ஸ்பார்மருக்கு மின் கடத்தப்பட்டு தேவையான அளவிற்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/north-madras-power-e1693920599104.webp.jpeg)