தேசிய தொலைக்காட்சி மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘அனைவருக்கும் IT’ கல்வித் திட்டம் ஒன்றை ஒவ்வொரு வார இறுதியிலும் நடாத்தி வருகின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி; பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (05) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன்படி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4.30 மணிக்கு இக் கல்வி நிகழ்ச்சி நடைபெபறுகின்றது.
எந்தவொரு கட்டணமும் அறவிடாமல் மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து தேசிய தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.
இந் நிகழ்ச்சிகள் தொழிற்கல்விக்காக நடாத்தப்படுகின்றன, மேலும் இந்த நிகழ்ச்சியில்; பங்குபற்றுபவர்களுக்கு பல்கலைக்கழகத்தினூடாக பெறுமதியான சான்றிதழ் ஒன்றையும் வழங்குகிறது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் தகவல் தொழிநுட்ப நிறுவனங்களுடன் இணைந்து தேசிய தொலைக்காட்சி நடத்தும் நிகழ்ச்சியில், க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்கள் மட்டுமன்றி அனைவரும் பங்கேற்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.