இந்திய அணியில் இருக்கும் மற்ற வீரர்களுக்கு இருக்கும் ரசிகர்களைப் போலவே முகமது ஷமிக்கு ரசிகர்கள் ஏராளம். ரசிகர்கள் அவரை ‘லாலா’ என்று அன்புடன் அழைப்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஷமிக்கு இந்த செல்லப்பெயர் வைத்தது யார் தெரியுமா? இப்போது இந்திய அணியில் இருக்கும் முன்னாள் கேப்டனான விராட் கோலி தான் இந்தப் பெயரை வைத்தாராம்.
கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான தகவல்கள் பெரும்பாலும் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தும். ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த வீரரைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். தற்போதைய இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு ரசிகர்கள் எண்ணிக்கை ஏராளமாக உள்ளது. ஷமியின் ரசிகர்கள் அவரைப் பற்றிய ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். ஷமியின் ரசிகர்கள் அவரை ‘லாலா’ என்று அன்புடன் அழைப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த பெயர் வந்ததற்கான சுவாரஸ்யமான தகவலை இங்கே பார்க்கலாம்.
கோலி வைத்த பட்டப்பெயர் ‘லாலா’
லாலா என்ற பட்டப்பெயர் எப்படி வந்தது என ரசிகர்கள் பலரும் முகமது ஷமியை ஆர்வமாக பல ஆண்டுகளாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த கேள்விக்கு அவரே இப்போது பதில் கொடுத்துள்ளார். 33 வயதான முகமது ஷமி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடனான சிறப்பு உரையாடலின் போது, ”விராட் கோலி எனக்கு ‘லாலா’ என்ற பட்டப் பெயரைக் கொடுத்தார். நான் சாஹலை செல்லமாக லாலா என அழைப்பது வழக்கம். இதனைப் பார்த்த விராட் கோலி அதே பெயரில் என்னையும் அழைக்க ஆரம்பித்துவிட்டார்” என தெரிவித்துள்ளார்.
முகமது ஷமி தற்போது ஆசிய கோப்பை 2023ல் பிஸியாக உள்ளார். இந்திய அணியின் முதல் போட்டியில், அதாவது பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டிக்கான விளையாடும் லெவனில் அவர் சேர்க்கப்படவில்லை. எனினும், தற்போது நடைபெற்று வரும் நேபாள அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் லெவனில் அவருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
ஷமியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
ஷமியின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை பற்றி பேசுகையில், அவர் இதுவரை நாட்டிற்காக மொத்தம் 178 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 7 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் ஷமி.