உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் விவசாய அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் விவசாயத்தை நவீன மயப்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் திறப்பனை பிரதேச செயலக பிரிவின் 531 புளியங்குளம் கிராம சேவகர் பிரிவை உள்ளடக்கியதாக மிளகாய் உற்பத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதன் முதற் கட்டத்தின் கீழ் பயனாளிகள் 25பேருக்காக அரை ஏக்கர் நிலத்தில் மிளகாய் உற்பத்திக்காக 16இலட்சம் பெறுமதியான மிளகாய் விதைகள், உரம், விவசாய இரசாயனம், பாதுகாப்பு வேலி, பொலிதீன் மற்றும் கழிவகற்றும் பாத்திரங்கள் என்பன வழங்கப்பட்டன.
இவ்வுற்பத்தி மிகவும் வெற்றிகரமாகக் காணப்படுவதுடன் ஒரு விவசாயியினால் 15இலட்சம் ரூபா வரையான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டத்தில் 100 பயனாளிகளுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதுடன் தற்போது இவ்வுற்பத்தி செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூன்றாம் கட்டத்தின் கீழ் திறப்பனை பிரதேசத்தில் 41 பிரிவுகளையும் உள்ளடக்கியதான நிகழ்ச்சித் திட்டம் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.